சிவாஜிக்காக இயக்குனரும் எடிட்டரும் மோதல்... காரியம் சாதிக்க இப்படி எல்லாமா செய்வாரு?

DM
தமிழ்ப்படங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் என்றாலே அதற்கு தனி மவுசு தான். இவரது தெய்வமகன் படத்தில் நடந்த சில சுவையான சம்பவங்களைப் பார்ப்போம்.
தெய்வமகன் படத்தை இயக்கியவர் ஏ.சி.திருலோகசந்தர். இந்தப் படத்தில் 3 சிவாஜியும் ஒரு சேர இணைந்து நடித்த காட்சி மறக்க முடியாதது. இந்தக் காட்சி 7 நிமிடங்கள் வரை போகும். காட்சியின் நீளம் அதிகமாக இருப்பதால் ஏதோ ஒரு சிவாஜியைக் கட் செய்ய வேண்டும் என்று எடிட்டர் பிடிவாதமாக இருந்தார். ஆனால் இயக்குனர் மறுத்துவிட்டார். இந்தப் படத்தில் 3 மாறுபட்ட வேடங்களில் சிவாஜி நடித்தார். 3 வேடங்களிலும் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்தார்.
வங்க எழுத்தாளர் நிகர் ரஞ்சன் குப்தா எழுதிய உல்கா என்ற நாவல் தான் வங்களாளத்தில் முதன் முதலாகப் படமானது. அதன்பின் கன்னடம், இந்தியில் வெளியானது. இதே படம் தான் தமிழில் தெய்வமகன் ஆனது.

Deiva Magan
கிராபிக்ஸ் இல்லாத அந்தக் காலத்தில் இப்படி ஒரு அபூர்வ படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர். ஒரே இடத்தில் கேமராவை வைத்து மவுண்ட் செய்து 3 வேடங்களையும் வெவ்வேறு ஒப்பனையுடன் பிரித்து ஒளிப்பதிவு செய்ய வேண்டி இருந்தது. 3 வேடங்களும் ஒரே காட்சியில் கொண்டு வர வேண்டும். படத்தின் சவாலான அந்தக் காட்சியை மிகுந்த சிரத்தையுடன் படமாக்கினார் இயக்குனர்.
அந்த ஒரு காட்சியின் நீளம் மட்டும் 7 நிமிடங்கள். படத்தின் சிகரமான அந்தக் காட்சி நீளமாக இருப்பதால் ஏதாவது ஒரு வேடத்தைக் குறைத்து நீளத்தைக் குறைக்க வேண்டும் என்றார் எடிட்டர். திருலோகசந்தரும் அந்தக் காட்சியைத் திரும்ப திரும்பப் போட்டுப் பார்த்து விட்டு எப்படி குறைப்பது? 3 பேருமே போட்டிப் போட்டுக் கொண்டு நடித்துள்ளார்கள்.
இதில் யாரைக் குறைப்பது? நம் நடிகர் திலகம் உலகக் கலைஞராக மாறி விட்டதற்கு இந்த ஒரு காட்சி போதும். எனக்காக இந்தக் காட்சியை அப்படியே விட்டு விடுங்கள் என்று எடிட்டரிடம் கேட்டபடி கையெடுத்து கும்பிட்டாராம்.
அவரது பிடிவாதம் வீண் போகவில்லை. அதைப் போன்ற ஒரு காட்சி அமைப்போ, நடிகரோ இனி தமிழ் சினிமாவில் சாத்தியமே இல்லை என்று விமர்சகர்கள் எழுதினர். இந்திய சினிமாவில் எட்ட முடியாத இடத்துக்குச் சென்றது தெய்வமகன். ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.