ஹாலிவுட் படம் அளவுக்கு தரமாக ஈரம் எனும் ஹாரர் படத்தை கொடுத்தவர் இயக்குனர் அறிவழகன். கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில் ஆதி, சிந்து மேனன், நந்தா மற்றும் சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தண்ணீரில் பேய் என்கிற கருவை மையமாகக் கொண்டு அறிவழகன் இயக்கிய ஈரம் திரைப்படம் அனைத்து ரசிகர்களும் ரசிக்கப்பட்டது. அந்தப் படத்தை தொடர்ந்து குற்றம் 23, ஆறாது சினம், வல்லினம் போன்ற படங்களை அறிவழகன் இயக்கினார்.
இதையும் படிங்க:நன்றி கெட்ட ரஞ்சித்!.. ஏத்தி விட்டதுக்கு ரஜினிகாந்தை நல்லா செஞ்சிட்டாரு!.. கொதிக்கும் ரசிகர்கள்!..
ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதையுடன் தனது முத்திரையை பதித்து வந்த அறிவழகன் தற்போது சப்தம் எனும் இன்னொரு ஹாரர் படத்துடன் ரசிகர்களை மிரட்ட காத்திருக்கிறார். இந்த படத்தில் மீண்டும் ஆதி ஹீரோவாக நடித்துள்ளார். நடிகைகள் சிம்ரன், லைலா மற்றும் லட்சுமி மேனன் என 3 திறமையான நடிகைகள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
சந்திரமுகி 2 திரைப்படம் லட்சுமி மேனனுக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் அந்த படம் சொதப்பி விட்டது. மீண்டும் பேய் படத்தில் தான் நடிப்பேன் என இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார் லட்சுமி மேனன். சிம்ரன் மற்றும் லைலா இருவரும் சீனியர் நடிகைகள் என்பதால் லட்சுமி மேனன் தான் இந்த படத்தில் ஹீரோயின் என்பது தெளிவாக தெரிகிறது.
இதையும் படிங்க: தனுஷை அசிங்கப்படுத்தினாரா லதா ரஜினிகாந்த்?!.. விவாகரத்து பின்னாடி இவ்வளவு கதை இருக்கா!..
தண்ணீரை வைத்து மிரட்டிய அறிவழகன் இந்த படத்தில் சப்தத்தை வைத்து பயமுறுத்த காத்திருக்கிறார். டீசரின் ஒவ்வொரு காட்சிகளும் மிரட்டலாக ஏகப்பட்ட கதைகளையும் சொல்லி வருகின்றன. இந்த சம்மருக்கு ஆதி, லட்சுமி மேனன் நடிப்பில் தரமான சம்பவம் காத்திருக்கிறது.
ஈரம் படத்துக்கு இசையமைத்த தமன் மீண்டும் இந்த படத்துக்கும் இசையமைத்துள்ளார். தெலுங்கு படங்களுக்கு சென்று டிரம்ஸ் அடித்துக் கொண்டிருந்த தமன் இந்த படத்தில் பழைய தமனாக திரும்பியுள்ளார்.