ரசிகர்ளை மிரள வைத்த செம திகில் படம்!.. மீண்டும் களமிறங்கும் அதே கூட்டணி....

by Rohini |   ( Updated:2022-12-14 06:09:14  )
aathi_main_cien
X

aadhi

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான பயங்கர திகில் படம் ‘ஈரம்’ திரைப்படம். 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை அறிவழகன் என்பவர் இயக்கியிருந்தார். அறிவழகனுக்கு இது தான் முதல் படம். முதல் படத்திலேயே முத்திரையை பதித்தார்.

aadhi1_cine

eeram movie

ஈரம் திரைப்படத்தில் நடிகர் ஆதி, நடிகை சிந்து மேனன், நடிகர் நந்தா, நடிகை சரண்யா மோகன் மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். காதல் கலந்த திரில்லர் படமாக அமைந்த ஈரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க : ஒரு நடிகருக்குமாயா போட்டி போடுவீங்க?.. அந்த இளம் நடிகரை நடிக்க வைக்க துணிவும் வாரிசும் மோதிக் கொண்ட சம்பவம்!..

இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இயக்குனர் அறிவழகன் ஈரம் படத்தை தொடர்ந்து வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் அறிவழகன்.

aadhi2_Cine

arivazhahan

தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆல்பா ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலம் தான் இயக்கும் முதல் படத்தையே தயாரிக்கிறார் அறிவழகன். ‘சப்தம்’ என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் ஈரம் படத்தின் கூட்டணி தான் மீண்டும் இணைய இருக்கின்றது.

ஆதி, தமன் கூட்டணியில் அறிவழகன் தயாரிப்பு மற்று இயக்கத்தில் சப்தம் படம் தயாராக இருக்கின்றது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. இதுவும் ஒரு வித திரில்லர் படம் தான் என்று சொல்லப்படுகிறது.

aadhi3_cine

saptham

படத்தின் போஸ்டர் பார்த்தாலே ஒரு வித பயம் கலந்த திகில் படம் போல தோன்றுகின்றது. நீண்ட நாளைக்கு பிறகு அதே கூட்டணியில் சப்தம் படம் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story