அடியே கொல்லுதே....அழகோ அள்ளுதே!...சந்தானம் பட நடிகையின் ரீசண்ட் க்ளிக்...

சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் இறுதி காட்சியில் சந்தானம் கானா பாடல் பாடும் போது அப்பாடலில் வந்து நடனம் ஆடியவர் தேஜு அஸ்வினி. தமிழில் ‘கல்யாண சமையல் சாதம் ’ என்கிற வெப் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். கவின் நடித்த ஆல்பம் பாடலான ‘அஸ்க்குமாரோ’ வீடியோவில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதன் விளைவாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்லபோகிறாய்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த பட விழாவில்தான் ‘40 கதை கேட்டு தூங்கிட்டேன்’ என அஸ்வின் பேசியது சர்ச்சைக்கும், கிண்டலுக்கும் உள்ளானது.
ஒரு பக்கம் ஷிவானி நாராயணன் போல் இவரும் புகைப்படங்கள் மூலம் பிரபலமாகலாம் என கணக்குப்போடுகிறாரா என தெரியவில்லை. ஏனெனில், அவரைப் போலவே பளிச் அழகில் போஸ் கொடுத்து அவர் நெட்டிசன்களின் மனதை திருடி வருகிறார்.
இதையும் படிங்க: தம்மாத்துண்டு கப்பு வச்சி மறைச்சிட்டியே!….ரசிகர்களை சூடாக்கிய நடிகை தமன்னா….
இந்நிலையில், புடவையில் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.