ரஜினி மாதிரி ஆணுக்குதான் கழுத்தை நீட்டுவேன்..- ஏ.வி.எம்மிற்கு லெட்டர் போட்ட பெண்!

by Rajkumar |
ரஜினி மாதிரி ஆணுக்குதான் கழுத்தை நீட்டுவேன்..- ஏ.வி.எம்மிற்கு லெட்டர் போட்ட பெண்!
X

சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டம் முதலே நடிகர் ரஜினிகாந்திற்கு பெரிய ரசிக பட்டாளம் இருந்து வருகிறது. 1990கள் காலக்கட்டங்களில் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்தார் ரஜினி. அப்போதுதான் அவருக்கான ரசிக வட்டாரங்கள் அதிகரிக்க துவங்கின.

இப்போதும் கூட இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் ஒரு நாயகனாகதான் நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார். ரஜினிகாந்த் நடித்து 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எஜமான். இந்த திரைப்படத்தில் நெப்போலியன் வில்லனாக நடித்திருப்பார். ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார்.

ejamaan

ஆர்.வி உதயகுமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்தது. எஜமான் திரைப்படம் வெளியானவுடனே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் ஏ.வி.எம் சரவணன் ரசிகர்களுக்கு ஒரு விஷயத்தை அறிவித்தார்.

அதாவது எஜமான் திரைப்படம் குறித்த அவர்களது கருத்தை கடிதமாக எழுதி அதை ஏ.வி.எம் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த அறிவிப்பிற்கு பிறகு ஏகப்பட்ட கடிதங்கள் ஏ.வி.எம் அலுவலகத்திற்கு வந்தன. அதில் ஒரு கடிதத்தை தற்சமயம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது ஏ.வி.எம் நிறுவனம்.

avm letter

அந்த கடிதத்தை எழுதியுள்ள திலகவதி என்கிற பெண் எஜமானில் வரும் வானவராயன் மாதிரியான ஒரு ஆண் கிடைத்தால் கண்ணை மூடிக்கொண்டு கழுத்தை நீட்டுவேன். என் கணவரோடு பலமுறை இந்த படத்தை பார்த்தேன் என படத்தை பாராட்டி எழுதியுள்ளார்.

தற்சமயம் சமூக வலைத்தளங்களில் இது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Next Story