ஏக்நாத் மூவி கிரியேஷன்ஸ் வழங்கிய அதிரடி திரைப்படங்கள் - ஓர் சிறப்பு பார்வை

by sankaran v |
ஏக்நாத் மூவி கிரியேஷன்ஸ் வழங்கிய அதிரடி திரைப்படங்கள் - ஓர் சிறப்பு பார்வை
X

pavunu pavunuthan

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்களுள் ஏக்நாத் மூவி கிரியேஷன்ஸ் நடத்தி வந்தவர் பிரபல தயாரிப்பாளர் ஏக்நாத். இவரது படங்கள் அனைத்தும் ஹிட் தான். இவர் இரு தினங்களுக்கு முன்பு தான் உடல்நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Eknaath

இவரது மனைவி கவுரி. சுரேஷ், அனுராதா என இரு பிள்ளைகள் உள்ளனர். இவரது நினைவாக இவர் தயாரித்த சில வெற்றிப்படங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

பவுனு பவுனுதான்

1991ல் கே.பாக்யராஜ் இசை அமைத்து இயக்கிய படம். ரோகிணி கதாநாயகியாக அட்டகாசமாக நடித்து இருந்தார். இந்தப்படத்தில் சாரதாப்ரீதா, பபிதா, நளினிகாந்த், அசோக்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் மனநலம் பாதிப்பிற்குள்ளான ரோகிணியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.

வெள்ளையத்தேவன்

vellaiya devan

1990ல் வெளியான படம். மனோஜ்குமார் இயக்கிய இந்தப்படத்தில் ராம்கி, கனகா, ஜனகராஜ் மற்றும் சித்ரா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. நல்ல இசை தட்டு, தங்கச்சி, உச்சி மலை, வானத்தில் இருந்து, காகம், பூந்தோட்டம் வளர்த்தேன், அக்கா மகளுக்கு, ஏத்தி வச்ச ஆகிய பாடல்கள் உள்ளன.

மௌனமொழி

1992ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் கஸ்தூரி ராஜா. ரமேஷ் அரவிந்த், சாலி உள்பட பலர் நடித்துள்ளனர். தேவாவின் இசையில் பாடல்கள் அற்புதம்.

பொத்தி வச்ச பச்சக்கிளி கொத்திக்கிழிச்சதம்மா பாடல் சூப்பர் மெலடி ரகம். தண்ணி குடம் கக்கத்துல தாங்கி வந்த அக்கா மக என்ற பாடல் ஒரு குதூகல கொண்டாட்டம்.

இந்திரன் சந்திரன்

கமல் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்த படம். இது ஒரு தெலுங்கு டப்பிங் படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்தப்படம் ஒரு புதுமையான படம். கமல் ரசிகர்களுக்கு விருந்து.

இரு வேடங்களில் ஒன்றில் கமல் தொப்பையுடன் கண்ணாடி அணிந்தபடி உறுமும் குரலில் கம்பீரமாக நடந்தபடி பேசும் பேச்சு இருக்கே...அடேங்கப்பா என்ன ஒரு நடிப்பு என்று கமலை அண்ணாந்து வியந்தபடி பார்க்க வைத்தது இந்த படம். தொப்பையோ உண்மையான தொப்பை மாதிரி அந்தக்காலத்திலேயே அப்படி ஒரு அபூர்வ மேக் அப். மேயராக வந்து அசத்தியிருப்பார்.

Indiran Chandiran

இந்தப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் யாரென்றால் அதுவும் நம்ம உலகநாயகன் கமல் தான். படத்தில் விஜயசாந்தி, ஸ்ரீவித்யா, சரண்ராஜ், நாகேஷ், சார்லி, கிரேசி மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் வசனம் எழுதியவர் கிரேசி மோகன் தான். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் வழக்கம்போல சூப்பர்.

காலேஜ் டிகிரியும், காதல் ராகமும், ஆரிரோ ஆரிரோ, நூறு நூறு முத்தம், அடிச்சிடு கொட்டம் ஆகிய முத்தாய்ப்பான பாடல்கள் உள்ளன. இந்தப்படத்திற்கான விநியோகத்தை ஏக்நாத் மூவி கிரியேஷன்ஸ் கவனித்தது.

Next Story