Connect with us

Cinema History

என்னப்பா! யானை கூட கோர்த்து விடுற! – விஜயகாந்தின் ஐடியாவால் அதிர்ச்சியடைந்த சத்யராஜ்!

சினிமாவில் படங்களில் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்த காலக்கட்டம் முதலே விஜயகாந்த், சத்யராஜ் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்.

விஜயகாந்திற்கு வாய்ப்பு கிடைத்து சில நாட்களில் நடிகர் சத்யராஜுக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அதே போல சமகாலத்தில் இருவரும் போட்டி நடிகர்களாக இருந்து வந்தனர். அப்போதும் கூட அவர்களுக்குள் இருந்த நட்பு குறையவில்லை.

1985 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் ஈட்டி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஜயகாந்திற்கு வில்லனாக நடிகர் சத்யராஜ் நடித்திருந்தார். சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் சத்யராஜ் வில்லனாகதான் நடித்து வந்தார்.

அந்த படத்தில் சத்யராஜை யானை துரத்துவது போன்ற ஒரு காட்சியை படமாக்குவதற்காக இயக்குனர் ராஜ சேகர் முதுமலை யானைகள் சரணாலயத்திற்கு படக்குழுவினரை அழைத்து சென்றார். அங்கு பயிற்றுவிக்கப்பட்ட யானையை கொண்டு காட்சியை படமாக்க திட்டமிட்டனர்.

ஆனால் அந்த பயிற்சி பெற்ற யானை சத்யராஜை துரத்தவே இல்லை. இதை பார்த்த விஜயகாந்த் “சத்யராஜ் கையில் ஒரு வெல்லத்தை எடுத்துக்கொண்டு போய் யானையிடம் காட்டி விட்டு ஓடுங்கள். யானைக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும். அதனால் உங்களை துரத்தும். பிறகு வெல்லத்தை தூக்கி வீசி விடுங்கள், யானை வெல்லத்தை எடுக்க சென்றுவிடும்” என கூறினார்.

இதை கேட்ட சத்யராஜ் அதிர்ச்சியாக விஜயகாந்தை பார்த்தார். “நீங்கள் சொல்ற மாதிரி செஞ்சா யானை துரத்தும் சரி, ஆனால் நான் வெல்லத்தை தூக்கி போட்ட பிறகு வெல்லத்தை யானை பார்க்காமல் அதை நான்தான் வச்சிருக்கேன் என துரத்தினால் என் கதி என்னாவது” எனக் கேட்டுள்ளார்.

இதை கேட்டதும் விஜயகாந்தால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரு பேட்டியில் விஜயகாந்த் குறித்து சத்யராஜ் பேசும்போது இந்த விஷயத்தை கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top