“எம்.ஜி.ஆர்தான் இதில் நடிக்கனும்”… இயக்குனருக்கு ஆர்டர் போட்ட கலைஞர்… அப்படி என்ன நடந்துருக்கும்??
1950 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், மாதுரி தேவி, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “மந்திரி குமாரி”. இத்திரைப்படத்தை எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு கதை எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி.
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான டி.ஆர்.சுந்தரம், எம்.ஜி.ஆரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார். ஆனால் இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கனுக்கு எம்.ஜி.ஆரை நடிக்க வைப்பதில் விருப்பம் இல்லை.
ஏனென்றால், எம்.ஜி.ஆரின் முகத்தில் இரட்டை நாடி இருந்ததால் அவர் இத்திரைப்படத்தின் கதாநாயக வேடத்திற்கு பொருத்தமாக இருக்கமாட்டார் என்பது எல்லீஸ் ஆர் டங்கனின் எண்ணமாக இருந்தது.
ஆனால் இத்திரைப்படத்திற்கு கதை எழுதிய கலைஞர், தனது நெருங்கிய நண்பரான எம்.ஜி.ஆரை விட்டுக்கொடுக்கவில்லை. “மந்திரி குமாரி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்க வேண்டும்” என்று ஒற்றை காலில் நின்றாராம். இதனால் இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கனுக்கும் கலைஞருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: கோரமான விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி… ஆபத்தான நிலையில் அவசர நிலை சிகிச்சை…
இருவருக்குள்ளும் இப்படியான விவாதங்கள் போய்க்கொண்டிருந்தால் படப்பிடிப்பு நடத்த முடியாதே என்று நினைத்த தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம், எல்லீஸ் ஆர் டங்கனிடம் ஒரு யோசனையை கூறினார்.
‘உங்களுக்கு இரட்டை நாடிதானே பிரச்சனை. எம்.ஜி.ஆரின் நாடியில் ஒரு சின்ன ஒட்டுத்தாடியை ஒட்டிவிடுங்கள். அதன் பின் அவரது முகம் இந்த கதாப்பாத்திரத்திற்கு சரியாக பொருந்தும்” என கூறினார். அதன்படி எம்.ஜி.ஆருக்கு ஒட்டுத்தாடி ஒட்டப்பட்டது. டி.ஆர்.சுந்தரம் கூறியவாறு அந்த கதாப்பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக தெரிந்தார் எம்.ஜி.ஆர். அதன் பிறகுதான் படப்பிடிப்பை தொடங்கினார்களாம்.