மலையாள சினிமாவை தூக்கி நிறுத்திய ‘எம்புரான்’.. விஜய் சாதனையை சுக்கு நூறாக்கிய மோகன்லால்

by Rohini |   ( Updated:2025-03-28 04:32:47  )
empuran 1
X

empuran 1

Empuran: நேற்று பிரம்மாண்டமாக வெளியானது மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம். இந்தப் படத்தை பிரித்விராஜ் இயக்கியிருக்கிறார். மோகன்லாலுடன் இணைந்து மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். அரசியல் பின்னணியில் உருவான இந்தப் படம் முதல் நாளிலேயே கோடிகளை அள்ள ஆரம்பித்துவிட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு லூசிபர் என்ற பெயரில் இதன் முதல் பாகம் வெளியானது.

முதல் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வெற்றியை பெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து லூசிபர் 2 எம்புரான் என்ற பெயரில் இதன் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. படத்தை புரோமோட் செய்ய அனைத்து ஊர்களுக்கும் மோகன்லால், மஞ்சு வாரியர், பிரித்விராஜ் ஆகியோர் சென்று படத்தை நல்ல முறையில் சேர்த்தனர். சமீபகாலமாக மலையாள சினிமாவில் இருந்து நல்ல கதைகள் வர ஆரம்பித்துவிட்டன.

அந்த வகையில் எம்புரான் திரைப்படமும் முதல் நாளிலேயெ உலக அளவில் 50 கோடி வசூலை பெற்றதாக தெரிகிறது. இனி வரும் காலங்களில் இன்னும் இதனுடைய வசூல் எண்ணி பார்க்க முடியாத அளவு எகிறும் என்று தெரிகிறது. இந்த நிலையில் UK வில் எம்புரான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய செய்தி தற்போது கிடைத்துள்ளது. இதுவரை இந்திய படங்களில் விஜய் நடித்த லியோ திரைப்படம் தான் UK வில் முதல் நாளில் அதிக வசூலை பெற்ற திரைப்படமாக இருந்தது.

ஆனால் அந்த சாதனையை இப்போது எம்புரான் திரைப்படம் முறியடித்திருக்கிறது. எம்பூரான் திரைப்படம் முதல் நாளில் பிரீமியர்ஸ் உட்பட UK பாக்ஸ் ஆபிஸில் £630k+ வசூல் செய்து, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமான ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதிலிருந்து மலையாள சினிமாவின் தரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கின்றது.

ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் பெரிய பெரிய நடிகர்கள் தங்கள் சம்பளத்தில்தான் குறியாக இருக்கிறார்களே தவிற மற்ற மொழி சினிமாக்கள் மாதிரி தமிழ் சினிமாவையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் பல கோடிகளை சம்பளமாக கையகப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Next Story