5 நாள்களில் மொத்தமா அள்ளிய எம்புரான் திரைப்படம்.. வசூல் எவ்வளவு தெரியுமா? படக்குழு அறிவிப்பு

mohan
மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் எம்புரான். லூசிபர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக எம்புரான் திரைப்படம் உருவானது. இந்த படத்தில் மோகன் லால், பிருத்திவிராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படம் ரிலீசுக்கு முன்பே இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஏனெனில் இதன் முதல் பாகமான லூசிபர் படத்தின் வெற்றி தான் இதற்கு முக்கிய காரணம். மலையாள சினிமா சமீப காலமாக பெரும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்க அதற்கேற்ற வகையில் எம்புரான் திரைப்படமும் வெளியாகி மொத்தமாக மலையாள சினிமாவையே தூக்கி நிறுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படம் வெளியாகி முதல் இரண்டு நாட்களில் மலையாள சினிமாவில் 50 கோடியை தட்டி தூக்கி ஒரு பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.
இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் ஐந்து நாட்கள் ஆகும் நிலையில் இந்த ஐந்து நாட்களில் எம்புரான் திரைப்படம் வசூலில் எவ்வளவு அள்ளி இருக்கிறது என்பதை படக்குழு அறிவித்திருக்கிறது. படம் வெளியாகி ஐந்து நாட்களில் உலக அளவில் எம்புரான் திரைப்படம் 200 கோடியை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. இனிவரும் நாட்களில் இதனுடைய கலெக்ஷனும் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
படத்தின் கதைப்படி கேரள முதல்வர் இறந்த பிறகு அங்கு ஆட்சியை கைப்பற்றுவது யார்? அங்கு மிகப்பெரிய போதை கும்பல் தலைவராக செயல்படுபவர் விவேக் ஓபராய். இதை அறிந்து ஸ்டீபன் நெடும்பள்ளி களத்தில் இறங்க இதை முற்றிலுமாக ஒடுக்க நினைக்கிறார் மோகன்லால். கேரள முதல்வர் இறந்த பிறகு அவருடைய மகன் டோவினோதாமஸிடம் ஆட்சி ஒப்படைக்கப்படுகிறது.
அவருடைய மகனும் ஒரு நல்ல ஆட்சியை தரவில்லை. இதற்கு இடையில் சர்வதேச போதை கும்பலும் இடையில் வர மோகன்லால் இந்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் எப்படி ஒடுக்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை ஒரு பாசிட்டிவான விமர்சனத்தையே படம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.