Empuraan Review: நாலு, பைட்டு… மாஸ் பிஜிஎம் போட்டா படம் ஹிட்டா?

Empuran Review
Empuraan Review: மலையாள சினிமா உலகின் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் ஆன லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகி இருக்கிறது எம்புரான். மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வெளியாகி இருக்கும் திரைப்படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்களை பேசும் திரை விமர்சனம் இது.
பிரபல நடிகர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்தில் முக்கிய நடிகரான மோகன்லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன், பசில் நடித்துள்ளனர். மிக முக்கிய வேடத்தில் பிரித்திவிராஜும் நடித்திருக்கிறார்.
எம்புரான் திரைப்படம் லூசிபரின் கதையாக தொடர்கின்றது. மேலும் அரசியல் சண்டைகள், துரோகங்கள் மற்றும் பழிவாங்குதல்களின் தீவிரத்தை மேலும் விரிவாக்குகிறது. ஸ்டீபன் நெடும்பள்ளி மற்றும் புதிய வில்லன் ஸாயித் மசூத் ஆகியோரின் மோதலைப் பற்றி இத்திரைப்படம் பேசுகிறது.

படத்தின் முக்கிய பிளஸாக பார்க்கப்படுவது பிரித்விராஜின் டைரக்ஷன் தான். எங்கையும் கதையில் பிசிறு தட்டவே இல்லை. அதுபோல முரளி கோபியின் திரைக்கதை பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கின்றது.
மலையாள உலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் நடிப்பு மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது. அவர் ஸ்டீபன் நெடும்பள்ளியாக நடித்துள்ள காட்சிகள் மிரள வைக்கிறது. அதேபோல தன்னுடைய கேரக்டரை வலிந்து திணிக்காமல் நேர்த்தியாக சேர்த்து இருக்கிறார் பிரித்விராஜ் சுகுமாரன்.
வில்லன் ஸாயித் மசூத்தாக அவர் வருவதும் சுவாரஸ்யமாக இருக்கும்.
சூஜித் வாஸுதேவ் படப்பிடிப்பு பரபரப்பை பற்ற வைக்கிறது. விசுவல் மற்றும் ஆக்சன் காட்சிகள் படத்தின் மீது சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. தீபக் தேவின் இசை காட்சிகளுடன் அற்புதமாக பொருந்தியிருக்கின்றது.
ஆனாலும், கதை சில இடத்தில் திணறுகிறது. அரசியல் பிரச்சனைகள் பலருக்கும் வலிந்து திணிக்கப்பட்டது போல தோன்றலாம். குறிப்பாக லூசிபர் படத்தினை பார்க்காதவர்கள் கதை கற்றுக் கொள்ள மிகுந்த குழப்பம் ஏற்படலாம். ஒரு சில காட்சிகள் இழுவையாக இழுக்க இதனால் பார்ப்பவர்களுக்கு சலிப்பை தரலாம். மொத்தத்தில் எம்புரானால் மீண்டும் மலையாள சினிமா கிரேட் எஸ்கேப் தான்!