குழந்தை பெற்ற பின்னர் காதலில் விழுந்த ரஜினி பட நடிகை..! அதுவும் மூன்றாவது முறையாக காதல்...!
காதல் ஒருமுறை தான் வருமா என்ன? எத்தனை முறை வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் காதல் வரும். அதற்கு உதாரணமாக பலர் உள்ளனர். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவர் மூன்றாவது முறையாக காதலில் விழுந்துள்ளாராம்.
அவர் வேறு யாருமல்ல தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன் தான். அப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்த எமி எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தார்.
பின்னர் தமிழ் சினிமாவை தவிர்த்து ஹிந்தியில் கவனம் செலுத்தி வந்த எமி ஜாக்சன் பட வாய்ப்புகள் குறைந்ததும் லண்டன் சென்று செட்டிலாகி விட்டார். அந்த சமயத்தில் பாலிவுட் நடிகர் பிரதீக் பாப்பருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த எமி சில காரணங்களால் அவரை விட்டு பிரிந்தார்.
பின்னர் லண்டனை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜை காதலித்த எமி திருமணம் நிச்சயம் செய்த நிலையில், திருமணத்துக்கு முன்பே ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ஜார்ஜை பிரிந்து தற்போது தனியாக வசித்து வரும் எமி ஜாக்சன் மூன்றாவதாக ஒரு நடிகரை காதலிக்கிறாராம்.
அதன்படி இங்கிலாந்தை சேர்ந்த தொலைக்காட்சி நடிகர் எட் வெஸ்ட்டியும் எமி ஜாக்சனும் காதலிப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.