விஷால் திருப்பதிக்கு நடந்து போனது வேஸ்ட்டா போச்சே!.. ரசிகர்களை ஏமாற்றிய எனிமி...

by சிவா |
enemy
X

நடிகர் விஷால் ஹிட் படம் கொடுத்து வெகுநாளாகி விட்டது. அதாவது 2018ம் ஆண்டு வெளியான இரும்புத்திரைதான் அவர் நடிப்பில் வெளிவந்த ஹிட் படமாகும். அதன்பின் அவர் நடிப்பில் சில படங்கள் வெளியாகி விட்டது. ஆனால், ரசிகர்களை எந்த படமும் கவரவில்லை. விஷால் பெரிதும் எதிர்பார்த்த சண்டக்கோழி 2வும் ஊத்திக்கொண்டது.

தற்போது விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்து நேற்று வெளியான திரைப்படம் எனிமி. இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். இப்படத்தை அரிமா நம்பி, நோட்டா, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

enmey

ஆனால், இப்படமும் ரசிகர்களை கவரவில்லை. ஒரு விஷயத்தை வெவ்வேறு மாதிரி யோசிக்கும் 2 நண்பர்களின் கதை.படத்தின் துவக்கத்தில் சிறு வயது விஷால் மற்றும் ஆர்யா ஆகியோரின் காட்சிகள் சபாஷ் போட வைத்தது. எனவே, படம் நன்றாக இருக்கும் போல என ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால், அதன்பின் காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லை.

திரைக்கதையில் எந்த திருப்பமும் இல்லை. ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது படம். சரி காசு கொடுத்து டிக்கெட் வாங்கி விட்டோம் என்பதற்காகவே பலரும் தியேட்டரில் அமர்ந்திருக்கின்றனர்.

vishal

படம் சிங்கப்பூரில் நடிப்பது போல காட்டி அனைத்து காட்சிகளையும் துபாயில் எடுத்துள்ளனர். எனவே, அந்த ஊர் அமைப்புக்கும், சிங்கப்பூருக்கும் உள்ள வித்தியாசம் பல காட்சிகளில் தெரிகிறது. ஆர்யாவின் கதாபாத்திரத்தை ஓவராக பில்டப் செய்தே

வீணடித்துள்ளனர். அவர் வரும் காட்சிகளில் எந்த விறுவிறுப்பும் இல்லை. படத்தில் காமெடியும் ஒர்க் அவுட் ஆகவில்லை.அதேபோல், மிர்னாளினி ரவி ஹீரோயின் என்கிறார்கள். 2 பாடலுக்கு மட்டும் வந்து போகிறார்.

இப்படம் வெற்றி பெற வேண்டும் என விஷால் திருப்பதி மலையில் கீழே இருந்து மேலே நடந்து சென்று பிரார்த்தனை செய்தார்.

ஆனால், வெங்கடாசலபதியும் அவரை காப்பாற்றவில்லை...

Next Story