ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4ம் தேதி வெளியாகவுள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் தியேட்டரில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது தியேட்டர் அதிபர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் விஷாலும், ஆர்யாவும் இணைந்து நடித்துள்ள எனிமி படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
தமிழகத்தில் அண்ணாத்த படத்தை வினியோகம் செய்யும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. எனவே, ‘எனிமி’ படத்திற்கு முக்கிய தியேட்டர்களை கொடுக்கக் கூடாது எனவும், 90 சதவீத தியேட்டர்களை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் ரெட் ஜெயண்ட் மூவில் கண்டிஷன் போட்டிருப்பதாக செய்திகள் கசிந்தது.
அண்ணாத்த படம் சுமார் 550 தியேட்டர்களிலும், எனிமி திரைப்படத்திற்கு அதிக பட்சமாக 200 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதோடு, அந்த 200 தியேட்டர்களும் அதிகம் வசூல் வராத தியேட்டர்கள் எனவும் கூறப்படுகிறது. இதனால், எனிமி படத்தின் தயாரிப்பாளர் அதிருப்தியில் இருப்பதால் தீபாவளி ரேஸிலிருந்து அப்படம் பின் வாங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
எனவே, ஆர்யாவும், விஷாலும் உதயநிதியை சந்தித்து பேச, அண்ணாத்த படத்தால் எந்த வகையிலும் எனிமி படம் பாதிக்காது என அவர் உறுதி கொடுத்ததாக தெரிகிறது. ஆனாலும், தியேட்டர்கள் குறைவாக கிடைப்பதால், தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டாம். ஒருவாரம் கழித்து ரிலீஸ் செய்வோம் என ஆர்யாவும், விஷாலும் எனிமி பட தயாரிப்பாளரிடம் கூறியுள்ளனர். ஆனால், அவர் அதை ஏற்கவில்லையாம். மேலும், நாளை உதயநிதிக்கு எதிராக செய்தியாளர் சந்திப்பை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.
ஏற்கனவே, எனிமி படத்திற்கு 250 தியேட்டர்கள் ஒதுக்கா விட்டால் யாராக இருந்தாலும் நான் எதிர்ப்பேன். அவர்களுக்கு எதிராக நான் போராடுவேன் என எனிமி பட தயாரிப்பாளர் வினோத்குமார் ஒரு ஆடியோவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், சினிமாவில் கடைசி நேரத்தில் எல்லாமே மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
NEEK Movie:…
Nayanthara dhanush:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் அஜித்தின்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்…