×

காம பேயின் கொடூர ஆட்டம்... "இரண்டாம் குத்து"  டீசர் ரிலீஸ்!

 "இரண்டாம் குத்து"  டீசர் ரிலீஸ்!
 

சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து அடல்ட் காமெடி படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி ஹிட்டானது.

அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, ஹீரோவாக நடித்துள்ளார் சந்தோஷ் ஜெயகுமார். இரண்டாம் பாகத்திற்கு இரண்டாம் குத்து என்று பெயர் வைத்துள்ளனர். அண்மையில் இரண்டாம் குத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கவுதம் கார்த்திக் வெளியிட்டார்.  

அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை ச்சீ என்று தான். ச்சீ கருமம். என்ன தான் அடல்ட் காமெடி படமாக இருந்தாலும் இப்படியா புகைப்படம் வெளியிடுவது?. இது அடல்ட் காமெடி படம் என்று சொல்வதற்கு பதிலாக அந்த மாதிரி படம் என்று நேரடியாக சொல்லிவிட வேண்டியது தானே என்றெல்லாம் விளாசினர் .

இந்நிலையில் சற்றுமுன் இரண்டாம் குத்து படத்தின் டீசர் வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. பேய்களிடன் கொடூர ஆட்டம் இந்த படத்தில் மிரட்டி எடுக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் வசனங்கள் முழுக்க முழுக்க இரட்டை அர்த்தம் கொண்டவையாகவே உள்ளது. நிச்சயம் அடல்ட் வாசிகளுக்கு இந்த படம் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ அந்த டீசர் வீடியோ.

From around the web

Trending Videos

Tamilnadu News