×

புதிய களத்தில் மைக்செட் ஸ்ரீராம்... நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்ற 'sound' யுடியூப் சேனல்...

 
புதிய களத்தில் மைக்செட் ஸ்ரீராம்... நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்ற 'sound' யுடியூப் சேனல்...

ஸ்ரீராம் என்கிற படித்த பட்டதாரி வாலிபரால் நடத்தப்படும் யுடியூப் சேனல் மைக்செட் (Micset). இந்த யுடியூப் சேனலுக்கு 6 லட்சத்து 24 ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். 5 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த யுடியூப் சேனலுக்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இளைஞர்கள் வாழ்வில் சந்திக்கும் அத்தனை சோதனைகளையும் நகைச்சுவையாக அதே சமயம் ரசிக்கும்படியாக வீடியோவாக வெளியிடுகின்றனர்.

siram

புதிது புதிதாக கண்டெண்டுகளை உருவாக்கி அசரடித்து வருகின்றனர்.  சில இளைஞர்கள் இணைந்து நடத்தும் இந்த யுடியூப் சேனலை ஸ்ரீராம் வழிநடத்தி வருகிறார். இவருக்கென ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது. இது எந்த அளவுக்கு எனில் கமெண்டில் ‘இங்கு எத்தனை பேர் ஸ்ரீராமை வெள்ளித்திரையில் பார்க்க விரும்புகிறீர்கள்?’ என ஒருவர் பதிவிடும் அளவுக்கு அவர் பலரையும் கவர்ந்துள்ளார்.

மேலும், பல விருதுகளையும் இந்த இளைஞர்கள் குழு பெற்றுள்ளது. Behindwoods நடத்திய விழாவில் விருது பெற்றனர். அதன்பின், சமீபத்தில் பிளாக் சிப் (Black Sheep) சார்பில் நடத்தப்பட்ட விருது விழாவில் கமல்ஹாசன் கையில் இவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது Sound எனும் புதிய யுடியூப் சேனலை இவர்கள் துவங்கியுள்ளனர். கடந்த மாதம் 25ம் தேதி துவங்கப்பட்ட இந்த சேனலை இதுவரை 4 லட்சத்து 72 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இந்த சேனலிலும் பல சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களை கவர்ந்து வருகின்றனர்.

micset

இந்த sound சேனலை அறிமுகப்படுத்துவதற்காக புரமோட் செய்யும் வகையில் ஸ்ரீராம் நடன கலைஞர்களுடன் இணைந்து குத்தாட்ட வீடியோ பலரையும் கவர்ந்தது. இவர்கள் நடித்தும் Micset மற்றும் Sound ஆகிய இரு யுடியூப் சேனல்களின் லிங்க்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மனதை இறுக்கமாக்கும் பல சூழ்நிலைகளை வாழ்வில் நாம் தினமும் சந்தித்து வரும் நிலையில், இது போன்ற யுடியூப் சேனல்கள் மனதை லேசாக்கி நம்மை சிரிக்க வைக்கிறது.

அப்புறம் என்ன?.. உடனே சப்ஸ்கிரைப் பண்ணுங்க.. என்ஜாய் பண்ணுங்க... 

மைக் செட் யுடியூப் சேனலை பார்க்க - 

https://www.youtube.com/c/MicSet_official/videos

சவுண்ட் யுடியூப் சேனலை பார்க்க 

 https://www.youtube.com/channel/UC5w2_DSNzUBBuXg32DCwEyA/videos

From around the web

Trending Videos

Tamilnadu News