போதும்பா ஹவுஸ்புல்லு.! எல்லா படமும் சம்மர்ல வந்தா என்னதான் செய்யுறது?....
நடிகர் கார்த்தி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜீஷா விஜயன் மற்றும் ராசிகன்னா உள்ளிட்ட இரண்டு ஹீரோயின்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்த சர்தார் படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இந்த படத்தில் கார்த்தி வயதான ஜெயில் கைதி மற்றும் போலீஸ் ஆபிசர் ஆகிய இரு வேடத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே வயதான கைதி கதாபாத்திரத்திற்க்கான படப்பிடிப்பு நிறைவடைந்து விட்ட நிலையில், தற்பொழுது போலீஸ் ஆபிசர் கதாபாத்திரத்திற்க்கான படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு வருவதால் வேகமாக படப்பிடிப்புகளை நிறைவு செய்து விட்டு படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கோடை விடுமுறையில் கேஜிஎப், வலிமை, பீஸ்ட் மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸ் செய்ய உள்ளதாக திட்டமிட்டுள்ள நிலையில் கார்த்தியின் சர்தாரும் கோடை விடுமுறையில் தான் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. எனவே, கோடை விடுமுறையில் மேலும் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படுவது கடினம் தான்.