Darsha gupta: கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். ஆனால், ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே, இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சின்னத்திரை பக்கம் போனார். விஜய் டிவியில் செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். அதன்பின் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டார். மோகன் இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின் ஓ மை கோஸ்ட், மெடிக்கள் மிராக்கிள் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், இந்த படங்கள் எதுவுமே ஓடவில்லை. தனக்கு நல்ல வாய்ப்பு வரும் காத்திருக்கிறார். விஜய் டிவியில் வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அதோடு, இப்போது நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக உள்ளே போனார்.
ஆனால், சில நாட்களிலேயே எவிக்ஷன் ஆனார். வைல்டு கார்ட் மூலம் மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் நன்றாக விளையாடுவேன் என சொல்லி இருந்தார். ஆனால், அவருக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சினிமாவில் ஏதேனும் வாய்ப்பு வரும் என நம்பி காத்திருக்கிறார். ஆனால், ஒன்றும் நடப்போது போல தெரியவில்லை.
இந்நிலையில்தான், கிறிஸ்துமஸ் உடையில் கொழுக் மொழுக் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு அவரின் ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்திருக்கிறார்.
ஜனநாயகன் படத்தின்…
டான் பிக்சர்ஸ்…
விஜயின் ஜனநாயகன்…
ஜனநாயகன் படத்தின்…
நடிகர் விஜய்…