Vedhika: கோலிவுட்டில் ஸ்லிம் பியூட்டியாக வலம் வருபவர் வேதிகா. அழகாக இருந்தும், சிக்கென உடலை கொண்டிருந்தும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். அது ஏனோ விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் பார்வை வேதிகா மீது படவில்லை. இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.
ஆனால், இவரின் குடும்ப பூர்வீகம் கர்நாடகா. அவரின் தாய் மொழி கூட கன்னடம்தான். அதனால், தமிழ், தெலுங்கு, கன்னடம் என மாறி மாறி நடித்து வருகிறார். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். அர்ஜூனின் கண்ணில் பட்டும் அவர் இயக்கி நடித்த மதராஸி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
அது முதல் இப்போது வரை கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். பாலா இயக்கத்தில் அதர்வா நடித்த பரதேசி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ராகவா லாரன்ஸுடன் முனி, காஞ்சனா 3 படங்களில் நடித்தார். சிம்புவுடன் காளை படத்தில் நடித்தார்.
சாந்தனு நடித்த சக்கரக்கட்டி, அருண் விஜய் நடித்த மல மல, சித்தார்த் நடித்த காவிய தலைவன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார். பிரபுதேவா நடிப்பில் பேட்ட ராப் படத்தில் நடித்தார். இந்த படம் ஓடவில்லை. இப்போது சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், ஸ்லிம் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு கிளுகிளுப்பு காட்டி வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு போன வேதிகா பிகினி உடையில் அழகை காட்டி ரசிகர்களை வெட்கப்பட வைத்திருக்கிறார்.
Pandian stores2:…
Siragadikka Aasai:…
கமல் நடித்த…
வாரம் தோறும்…
சியான் விக்ரமின்…