Categories: latest news

நல்லா சிக்குன்னு மாறிடுச்சே பாப்பா!.. கேப்ரியல்லாவின் ரீசண்ட் கிளிக்ஸ்..

Gabriella Charlton: விஜய் டிவி வளர்த்தெடுத்த பிரபலங்களில் கேப்ரியல்லாவும் ஒருவர். சிறுமியாக இருக்கும்போதே நடனத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

சிறுமியாக இருக்கும்போதே 3, சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இது அவருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. பிக்பாஸ் வீட்டில் சரியாக விளையாடி 102 நாட்கள் வரை தாக்குபிடித்தார்.

அவர் வெற்றி பெறுவர் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துகொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் சினிமாவில் நுழைய முயற்சிகள் எடுத்தார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, சீரியல் பக்கம் போனார்.

விஜய் டிவியில் ஓளிபரப்பான ஈரமான ரோஜாவே 2 சிரீயலில் முக்கிய வேடத்தில் நடித்தார். இது அவரை சீரியல் ரசிகைகளிடம் பிரபலப்படுத்தியது. தற்போது மருமகள் என்கிற சீரியலிலும் அடித்து வருகிறார். எப்படியாவது சினிமாவில் நுழைய வேண்டும் என வாய்ப்பு தேடி வருகிறார். ஆனால், ஒன்றும் கிடைக்கவில்லை.

சினிமாவில் வாய்ப்பை வாங்குவதற்காக அவ்வப்போது கட்டழகை விதவிதமாக காண்பித்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் சிக்கென்ற அழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நீ கார்ஜியஸ்’ என பதிவிட்டு ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா