Connect with us

மேரேஜ் ஆனாலும் கிளாமர் குறையலயே!.. வேறலெவலில் சூடேத்தும் கீர்த்தி சுரேஷ்!..

latest news

மேரேஜ் ஆனாலும் கிளாமர் குறையலயே!.. வேறலெவலில் சூடேத்தும் கீர்த்தி சுரேஷ்!..

Keerthi suresh: இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் கீர்த்தி சுரேஷ். இவர் ரஜினியுடன் நெற்றிக்கண் படத்தில் நடித்த மேனகாவின் மகள் ஆவார். அம்மாவும், அப்பாவும் சினிமாவில் இருந்ததால் இயல்பாகவே கீர்த்திக்கும் சிறு வயது முதலே சினிமா ஆசை வந்துவிட்டது.

சிறு வயது ஆசை: நான் பெரியவள் ஆகி விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பேன் என பள்ளியில் படிக்கும்போதே தனது தோழிகளிடம் சொல்லி இருக்கிறார். இவரின் ஆசை பின்னாளில் நிஜமாகவும் மாறியது. இது என்ன மாயம் படத்திற்கு பின் தொடரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்கள்தான் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

தேசிய விருது: அப்படியே ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழை விட தெலுங்கில் இவருக்கு நல்ல கனமான வேடங்கள் கிடைத்தது. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை விவரித்த மகாநடி படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அந்த வருடத்திற்கான தேசிய விருதையும் பெற்றார்.

விஜய்க்கு ஜோடி: விஜய்க்கு ஜோடியாக சர்கா, பைரவா போன்ற படங்களில் நடித்தார். மேலும், சூர்யா, விஷால், தனுஷ் என பலருடனும் நடித்தார். ஒரு கட்டத்தில் இவரும் நயன்தாராவை போல பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்தார். சாணி காயிதம், பெண் குயின், ரகு தாத்தா போன்ற சில படங்கள் அப்படி வெளிவந்தது.

காதலருடன் திருமணம்: தனது பல வருட காதலர் ஆண்டனியை சமீபத்தில் கோவாவில் திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணத்தில் விஜய், திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதோடு, ஹிந்தியில் கீர்த்தி நடிப்பில் உருவான பேபி ஜான் படமும் சமீபத்தில் வெளியானது. ஆனால், இப்படம் வெற்றி பெறவில்லை.

ஒருபக்கம், ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக அவ்வப்போது தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டு வரும் கீர்த்தி சுரேஷ், கழுத்தில் தாலியோடு கவர்ச்சி உடையில் ஸ்லிம் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top