உன் பளிங்கு மேனியை பார்த்தே பாழா போனோம்!.. இளசுகளை இம்சை செய்யும் கீர்த்தி ஷெட்டி...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:56  )

Krithi shetty: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி.. கன்னடம் தாய் மொழி என்றாலும் கன்னட படங்களில் அவர் நடிக்கவில்லை. நடிப்பு மற்றும் மாடலிங் என இரண்டு துறையிலும் ஆர்வம் கொண்டவர். கடந்த 4 வருடங்களாக மும்பையில் தங்கி இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை இவர்.

சூப்பர் 30 என்கிற ஹிந்தி படத்தில் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் போனார். விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்த தெலுங்கு படமான உப்பென்னா படத்தில் அறிமுகமானார். இந்த படம் ஹிட் அடிக்கவே அவருக்கு டோலிவுட்டில் தொடர் வாய்ப்புகள் வந்தது.

ஞானியுடன் ஷ்யாம் சிங்கா ரெட்டி படத்தில் நடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. வெங்கட் பிரபு தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் இயக்கிய கஸ்டடி, லிங்குசாமி தெலுங்கில் போய் இயக்கிய தி வாரியர் ஆகிய படங்களில் நடித்தார். அந்த 2 படங்களும் வெற்றிபெறவில்லை.

சமீபகாலமாக தமிழில் அதிக படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்து துவங்கிய வணங்கான் படத்தில் முதலில் கீர்த்தியே ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், படப்பிடிப்பு தாமதமானதால் அந்த படத்திலிருந்து விலகினார். அதன்பின் சூர்யாவும் அப்படத்திலிருந்து விலகினார்.

இப்போது கார்த்தி நடித்துள்ள வா வாத்தியாரே, லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.சி, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜெனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட்டின் இளம் ஹீரோக்களை குறி வைத்து ஜோடி போட்டு நடித்து வருகிறார். அவ்வப்போது பளிங்கு மேனியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், கருப்பு நிற புடவை அணிந்து கீர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story