இது வேலண்டைன்ஸ்டே ஸ்பெஷல்!.. பூஜா ஹெக்டேவின் ஹாட் கிளிக்ஸ் செம வைரல்!....

by சிவா |
இது வேலண்டைன்ஸ்டே ஸ்பெஷல்!.. பூஜா ஹெக்டேவின் ஹாட் கிளிக்ஸ் செம வைரல்!....
X

Pooja Hegde: சொந்த மாநிலம் கர்நாடகாவாக இருந்தாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் பூஜா ஹெக்டே. காலேஜில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்ட அதில் நுழைந்தார். சில அழகிப்போட்டிகளிலும் கலந்துகொண்டார். மிஷ்கின் தான் இயக்கிய முகமூடி படத்தில் பூஜாவை அறிமுகம் செய்து வைத்தார்.

அதாவது பூஜா ஹெக்டே சினிமாவில் அறிமுகமானதே ஒரு தமிழ் படத்தில்தான். ஆனால், மிஷ்கின் அமைத்த திரைக்கதை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, அப்படம் தோல்வி அடைந்தது. இந்த படத்தின் தோல்விக்கு நானே காரணம் என சமீபத்தில் கூட மிஷ்கின் சொல்லியிருந்தார்.

அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் போனார் பூஜா. அங்கு அவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அவர் அனுஷ்காவின் மார்க்கெட் போனதால் அந்த இடத்தை பிடித்தார்.

ஒருகட்டத்தில் தெலுங்கில் மார்க்கெட்டை பிடிக்க இவருக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜயுடன் இடுப்பை வளைத்து வளைத்து அவர் ஆடிய அரபிக்குத்து பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இப்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்திலும் பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். அதோடு, விதவிதமான கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி அவ்வப்போது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், இன்று காதலர் தினம் என்பதால் புதிய புகைப்படங்களை வெளியிட்டு அவரின் ஃபாலோயர்ஸ்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Next Story