பூஜா ஹெக்டேவின் நூல் ஜாக்கெட்!.. மமிதாவை மறந்தே போன தளபதி ஃபேன்ஸ்!.. அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:41:10  )

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜயுடன் மீண்டும் இணைந்து பூஜா ஹெக்டே நடிக்க உள்ள நிலையில் இன்று நடைபெற்ற தளபதி 69 படத்தின் பூஜை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த ஆண்டு வெளியான பிரேமலு படத்தின் மூலம் சென்சேஷனல் இளம் நடிகையாக மாறிய மமிதா பைஜு இன்று நடைபெற்ற பூஜை விழாவில் பங்கேற்று இருந்தார். ஆனால் ரசிகர்களின் கவனம் முழுவதும் அவர் மேல் செல்லாத அளவுக்கு பூஜா ஹெக்டே பார்த்துக் கொண்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமே பூஜா ஹெக்டே அணிந்து வந்த அந்த நூல் போன்ற ஜாக்கெட் தான் என்றும் விஜய்யை விட ரசிகர்களை இன்றைய விழாவில் வசீகரித்ததே ஹலமிதி ஹபிபோ பூஜா ஹெக்டே தான் என பலரும் போஸ்ட்டுகளை போட்டு தலைவி என பூஜா ஹெக்டேவை கொண்டாடி வருகின்றனர்.

மஞ்சள் நிற சுடிதாரில் மங்களகரமாக ஹோம்லி லுக்கில் வந்த மமிதா பைஜுவை ரசிகர்கள் பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டதற்கு காரணம் அவர் கவர்ச்சிகரமாக உடை அணிந்து வரவில்லை என்பதுதான் என்றும் கூறுகின்றனர். பூஜா ஹெக்டே தனது வசீகரித்தாலே ஒட்டுமொத்த இணையத்தையும் கவர்ந்து ஹாஷ்டேக் வருமளவுக்கு ட்ரெண்ட் ஆகிவிட்டார் என்றும் இதை அறிந்து தான் பிரியாமணி இன்றைய நிகழ்ச்சிக்கு வரவில்லையா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

மமிதா பைஜு இந்த படத்தில் விஜய்க்கு ஜோடி இல்லை என்றும் அபர்ணா தாஸ் பீஸ்ட் படத்தில் நடித்தது போல சின்ன ரோலில் நடிப்பார் அல்லது தங்கை கதாபாத்திரமாக இருக்கும் என்றே கூறுகின்றனர்.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் பூஜை வீடியோவையும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதிலும், முழுக்க முழுக்க தளபதி விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே தான் காட்சி அளிப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story