Priyanka Mohan: பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் பிரியங்கா மோகன். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு என எல்லாமே அவருக்கு அங்குதான். முதலில் ஒரு கன்னட படத்தில் நடித்தார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் போனார். நானி நடித்த கேங்லீடர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
அதன்பின்னர்தான் இவர் தமிழ் சினிமாவுக்கு வந்தார். நெல்சன் இயக்கிய டாக்டர் படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார். சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பொருத்தமான ஜோடியாக அவர் இருந்தார். இந்த படம் ஹிட் அடித்து 100 கோடி வரை வசூல் செய்தது. இதனால், பல இயக்குனர்களின் பார்வையும் பிரியங்கா மீது விழுந்தது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். மேலும், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். இதில் டான் நல்ல வசூலை பெற்றது. அதன்பின் டிக்டாக், கேப்டன் மில்லர், பிரதர் போன்ற படங்களில் நடித்தார். தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் இடம் பெற்றுள்ள கோல்டன் ஸ்பேரோ பாடலில் நடனமாடியிருக்கிறார்.
இந்த பாடல் ஏற்கனவே யுடியூப்பில் ஹிட் அடித்திருக்கிறது. அதோடு, பவன்கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ஓஜி என்கிற படத்திலும் பிரியாங்கா நடித்து வருகிறார். அவ்வப்போது அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அவரின் ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருகிறார்.
அந்தவகையில், புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை ஏங்க வைத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் வைரலாகி வருகிறது.
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…