பொறந்தநாளைக்கு கூட இப்படி புடவை கட்டலையேம்மா!.. மகளிர் தினத்துக்கு ஜிம்மில் சீன் போட்ட சஞ்சனா!..

by Saranya |   ( Updated:2025-03-09 05:31:02  )
பொறந்தநாளைக்கு கூட இப்படி புடவை கட்டலையேம்மா!.. மகளிர் தினத்துக்கு ஜிம்மில் சீன் போட்ட சஞ்சனா!..
X

ரேணிகுண்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை சஞ்சனா சிங். சமீபத்தில் தனது 39 வது பிறந்தநாளை மும்மையில் வேற லெவல் பார்ட்டி உடன் கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த தொடையழகன் தெரியும்படி கொண்டாடினார்.

கோ, ரகளைபுரம், அஞ்சான், மீகாமன், தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சக்க போடு போடு ராஜா, நாய் சேகர் ரிட்டன்ஸ், குருமூர்த்தி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். அடுத்ததாக ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் எக்ஸ் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


மகளிர் தினத்தை முன்னிட்டு பல முன்னணி நடிகைகள் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு சேலை அணிந்து கொண்டு ஜிம்மில் அனைத்து விதமான ஒர்க் அவுட்டுகளையும் செய்ய முடியும் என செய்து காட்டி வீடியோவாக வெளியிட்டுள்ளார் சஞ்சனா சிங்.

புடவை அணிந்து கொண்டு இடுப்பழகு மொத்தமும் தெரியும்படி அவர் செய்த உடற்பயிற்சியை பார்த்து ரசிகர்கள் இனிமேல் இப்படியே தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் என ஜொள்ளுவிட்டு வருகின்றனர். சேலை சமையல் அறைக்கு மட்டுமான உடை அல்ல எந்த இடத்தில் வேண்டுமானாலும் அதை அணிந்து கொண்டு பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என கவர்ச்சி நடிகை சொல்வது தான் மிகப்பெரிய வேடிக்கையான ஒன்று என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற உங்களுடைய பிறந்தநாள் விழாவுக்கு ஏன் சேலை அணிந்து கொண்டு கேக் வெட்டாமல் ஒட்டுமொத்த தொகை அழகும் தெரியும் படி ஓவர் கிளாமர் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டீர்கள். இதற்குப் பெயர்தான் ஃபேக் ஃபெமினிசம் என நெட்டிசன்கள் அடி பொளக்க ஆரம்பித்துவிட்டனர்.


Next Story