இடுப்பழகை பாத்தே ஏங்கி போயிட்டோம்!.. கவர்ச்சி விருந்து வைக்கும் ஸ்ரீலீலா!....
Sreeleela: அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் ஸ்ரீலீலா. அதன்பின் இவரின் குடும்பம் பெங்களூருக்கு குடி பெயர்ந்தது. ஸ்ரீலீலா சிறு வயதாக இருக்கும்போதே அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிட்டார்கள். சிறு வயது முதலே நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் ஸ்ரீலீலா. வளர்ந்தபின் தான் ஒரு மருத்துவராக வேண்டும் எனவும் ஆசைப்பட்டார்.
ஸ்ரீலீலாவுக்கு சமூக சேவையிலும் அதிக ஆர்வம் உண்டு. இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தும் வருகிறார். ஒருகட்டத்தில் மருத்துவராக வேண்டும் என்கிற ஆசையை விட்டுவிட்டு மாடலிங் துறைக்கு போனார். அதன்பின் சினிமாவில் நடிக்கும் ஆசையும் இவருக்கு வந்தது.
தெலுங்கில் இவருக்கு சினிமா தொடர்பான தொடர்புகள் இருந்தாலும் பெங்களூரிலேயே வளர்ந்ததால் கன்னட படங்களில் நடிக்கவே அவர் ஆர்வம் காட்டினார். 2019ம் வருடம் வெளிவந்த கிஸ் என்கிற படத்தில் அறிமுகமானார். அதன்பின்னரும் ஒரு கன்னட படத்தில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் போனார்.
தெலுங்கு, கன்னடம் என மாறி மாறி நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் தெலுங்கு படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார். பாலையாவுடன் இணைந்து இவர் நடித்த பகவத் கேசரி படம்தான் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படமாக உருவாகி வருகிறது.
மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்த குண்டூர் காரம் படத்தில் இடுப்பை வளைத்து வளைத்து ஸ்ரீலீலா போட்ட ஆட்டத்தில் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். சிவகார்த்திகேயனின் 25வது படத்திலும் இவர் நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம், ரசிகர்களை குஷிப்படுத்த கவர்ச்சியாக உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், ஸ்ரீலீலாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றி வருகிறது.