இனிமே இப்படி காட்டினாத்தான் வாய்ப்பு!.. சட்ட பட்டன கழட்டி காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்!..

by Murugan |
aishwarya rajesh
X


aishwarya rajesh


Aishwarya rajesh: டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் ஆங்கராக வேலை செய்தவர் ஐஸ்வர்யார் ராஜேஷ். மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாடி வின்னிங் டைட்டில் அடித்தார். ‘அவர்களும் இவர்களும்’ என்கிற படத்தில்தான் முதலில் நடித்தார். ஆனால், அடுத்து நடித்த ‘அட்டக்கத்தி’ திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.


காக்கா முட்டை: தனுஷ் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தில் 2 சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது ஐஸ்வர்யாவுக்கு கிடைத்தது. தனுஷுடன் வட சென்னை, விக்ரமுடன் சாமி ஸ்கொயர் படங்களில் நடித்தாலும் பெரிய நடிகர்களுடன் அடுத்தடுத்த வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை.


எனவே, சின்ன சின்ன ஹீரோக்களோடு தொடர்ந்து நடித்து வந்தார். ஒருகட்டத்தில் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கனா, க.பெ.ரணசிங்கம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, கிரேட் இண்டியன் கிச்சன் போன்ற படங்களில் நடித்தார்.


விஜய் சேதுபதி: ஆனால், அந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதேநேரம், நடிப்புக்கான நிறைய விருதுகளையும் இவர் வாங்கியிருக்கிறார். இவரின் குடும்பத்தில் பலரும் சினிமா துறையில் இருந்ததால் இவருக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. துவக்கத்தில் விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் இதுவரை வெளியாகவில்லை.


கவர்ச்சி புகைப்படங்கள்: இப்போது அவருக்கு வாய்ப்புகள் இல்லை என்பதால் இவரும் மற்ற நடிகைகள் போல கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அந்தவகையில், சட்டை பட்டனை கழட்டி அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு நான் கவர்ச்சிக்கும் ரெடி என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.




Next Story