கிளாமர் தூக்கலாதான் இருக்கு!.. இறங்கி அடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!. செம போட்டோஸ்!...
Aishwarya rajesh: தன்னுடைய குடும்பத்தில் சிலர் ஏற்கனவே சினிமாவில் இருந்ததால் ஐஸ்வர்யாவுக்கும் சினிமாவில் நுழைய வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. டிவியில் வேலைக்கு சேர்ந்து ஆங்கராக கொஞ்ச நாட்கள் வேலை செய்தார். அதன்பின் நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டு மானாட மயிலாட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
அதன்பின் சினிமாவில் நடிக்க முயற்சிகள் செய்தார். ஆனால், கிடைத்தது எல்லாம் சின்ன சின்ன வேடங்கள்தான். பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடித்த அட்டக்கத்தில் படத்தில் ஒரு வேடம் கிடைத்தது. அதன்பின் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மா வேடம் வந்தது.
பொதுவாக வளரும் நடிகைகள் இதுபோன்ற வேடங்களில் நடிக்கமாட்டார்கள். ஏனெனில், அப்படி நடித்தால் தொடர்ந்து அது போன்ற வேடமே கொடுப்பார்கள். ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடித்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
அதன்பின் விஜய் சேதுபதியுடன் இணைந்து சில படங்களில் நடித்தார். அவரை தவிர மற்ற ஹீரோக்கள் அவருடன் ஜோடி போட்டு நடிக்க ஆர்வம் காட்டவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்தார். திறமையான நடிகையாக இருக்கும் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
அப்படியே வாய்ப்பு வந்தாலும் பெரும்பாலும் கிராமத்து கதைகளாவே அமைந்தது. இப்படியே போனால் நமக்கு வாய்ப்பே வராது என புரிந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சியில் இறங்கிவிட்டார். அழகை காட்டி போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.