ராவா காட்டினாலும் ரசிக்க வைக்கிறியே!.. கிளுகிளுப்பு காட்டும் கிங்ஸ்டன் பட நடிகை!...

Dhiyva bharathi: கோவையை சேர்ந்தவர் திவ்யா பாரதி. சினிமா மற்றும் மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர். இதன் காரணமாக சில விளம்பர படங்களில் நடித்தார். ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படம் மூலம் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் மிகவும் துணிச்சலாக நடித்திருந்தார். ஏனெனில், ஐடி துறையில் வேலை பார்க்கும் மாடர்ன் பெண்களின் காதல், கர்ப்பம் தொடர்பான கதை இது.

அந்த படம் ஓடவில்லை என்றாலும் திவ்யா பாரதியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அந்த படத்திற்கு முன்பே முப்பரிமாணம் என்கிற படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார். பேச்சுலர் படம் வெளியாகி 3 வருடங்கள் இவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதன்பின் விஜய் சேதுபதி நடித்த மகராஜா படத்தில் நடித்தார்.

அதிலும், அதிக காட்சிகள் இல்லை. இப்போது கிங்ஸ்டன் படத்தில் மீண்டும் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவருக்கும், ஜிவி பிரகாஷுக்கும் இடையே கள்ளக்காதல் எனவும், இதனால்தான் ஜிவி பிரகாஷை அவரின் மனைவி சைந்தவி பிரிந்து சென்றார் எனவும் செய்திகள் வெளியானது.

ஆனால், அதை இருவருமே மறுத்தனர். திவ்யா எப்போதும் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே என ஜிவி பிரகாஷ் விளக்கமளித்திருந்தார். என்னை பற்றி தவறாக வரும் செய்திகளை நான் கடந்து சென்றுவிடுகிறேன் என திவ்யா கூறினார். கிங்ஸ்டன் படம் எதிர்பர்த்த வசூலை பெறவில்லை என சொல்கிறார்கள்.

ஒருபக்கம், எப்படியாவது தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என காத்திருக்கிறார். இதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், திவ்யாவின் புதிய புகைப்படங்கள் இளசுகளை ஏங்க வைத்திருக்கிறது.
