நம்ம ராயன் துஷராவா இது?!.. சைடு ஆங்கிளில் சும்மா தூக்கத்தை கெடுக்குறாரே!...
திண்டுக்கல்லை சேர்ந்த துஷரா விஜயன் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு மாடலிங் மற்றும் நடிப்பு துறையை தேர்ந்தெடுத்தார். இவர் அறிமுகமான திரைப்படம் போதை ஏறி புத்தி மாறி. பா,ரஞ்சித் இயக்கிய சார்பேட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் மனைவியாக வந்து அசத்தலான நடிப்பை கொடுத்திருந்தார்.
இந்த படத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தும்விட்டார். அதன்பின் அன்புள்ள கில்லி என்கிற படத்திலும் நடித்தார். மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்தில் நடித்தார். அதன்பின் கழுவேதி மூர்க்கன், அநீதி என சில சின்ன படங்களில் நடித்தார்.
தனுஷ் இயக்கி நடித்து வெளியான ராயன் படத்தில் அவரின் தங்கையாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்தில் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார். மேலும், ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
சியான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படத்திலும் நடித்திருக்கிறார். நடிப்புக்காக சில விருதுகளையும் பெற்றிருக்கிறார். மாடலிங் துறையில் அதிக ஆர்வமுள்ள துஷரா அவ்வப்போது கவர்ச்சி உடைகளில் பியூட்டியை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு அசத்தி வருகிறார்.
இந்நிலையில், துஷராவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி காஜி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது. தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் துஷரா.