தாவணி பாவாடையில் தளதளன்னு இருக்கு பாப்பா!.. ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் வைரல் பிக்ஸ்!....
Janhvi kapoor: தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழி படங்களிலும் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. 80களில் சினிமாவில் கலக்கியவர் இவர். பாலிவுட் படங்களில் நடிக்கப்போனபோது தயாரிப்பாளர் போனிகபூர் மீது காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.
இத்தனைக்கும் போனிகபூர் ஏற்கனவே திருமணமானவர். போனிகபூர் - ஸ்ரீதேவி தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள். இதில், மூத்தவர்தான் இந்த ஜான்வி கபூர். அம்மா, அப்பா சினிமா துறையில் இருந்ததால் சிறு வயது முதலே அவருக்கும் அந்த துறையில் ஆர்வம் ஏற்பட்டது. பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார்.
துவக்கத்தில் தடுமாறினாலும் ஒரு கட்டத்தில் நடிப்பு அவருக்கு கைவசப்பட்டது. ஆனால், அப்போதுதான் அம்மா ஸ்ரீதேவியின் மரணம் அவரை தடுமாற வைத்தது. ஒருவழியாக அதிலிருந்து மீண்டு சினிமாவில் நடிக்க துவங்கினார். அம்மாவை போல நடிப்பு திறமை இல்லை என்றாலும் கிளாமரை காட்டி கல்லா கட்டி வருகிறார்.
இதுவரை ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த ஜான்வி முதன் முறையாக ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவாரா எனும் தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஹிட் அடித்தால் தெலுங்கில் ஜான்வி தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கலாம். அதோடு, தமிழ் சினிமாவிலும் அவர் எண்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ஜான்வி கபூர் படுகவர்ச்சியான டிரெஸ்களை அணிந்து போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். அப்படி அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதுண்டு. அந்த வகையில், தாவணி பாவாடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.