ஸ்ரீதேவி பொண்ணா இல்லை சிலுக்கு பொண்ணா?.. ஜுரத்தை வரவைக்கும் ஜான்வி கபூர்!.. இடுப்பு சங்கிலி வேற!

Janhvi Kapoor: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் கலக்கிய நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள்தான் ஜான்வி கபூர். இவரின் அப்பா ஹிந்தியில் பெரிய தயாரிப்பாளராக இருந்தவர். இவர் தயாரித்த படங்களில் ஸ்ரீதேவி நடிக்கும்போது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அம்மா, அப்பா இருவரும் சினிமாவில் இருந்ததால் சின்ன வயதிலிருந்தே நாமும் சினிமாவில் இருக்க வேண்டும் என்கிற ஆசை ஜான்விக்கு ஏற்பட்டது. ஹிந்திப் படங்களில் நடிக்க துவங்கினார். அப்போதுதான் அவரின் அம்மா ஸ்ரீதேவி துபாயில் இறந்துவிட அது ஜான்வியை புரட்டி போட்டது.

ஆனாலும், அதிலிருந்து மீண்டு சினிமாவில் நடிக்க துவங்கினார். திரைப்படங்கள், வெப் சீரியஸ் என எதையும் விடவில்லை. ஜூனியர் என்.டி.அர் நடித்த தேவாரா படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் அவருக்கு தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

ஒருபக்கம் விரைவில் ஜான்வி தமிழ் சினிமாவிலும் நடிக்க துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அதிர்ஷ்டம் எந்த இளம் நடிகருக்கு அடிக்கப்போகிறது என்பது தெரியவில்லை. ஒருபக்கம், சினிமாவிலும், மாடலிங் துறையிலும் மார்க்கெட்டை தக்க வைக்க அழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கட்டழகை கச்சிதமாக காட்டி ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் ‘இது ஸ்ரீதேவி பொண்ணா இல்ல சிலுக்கு பொண்ணா?’ என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
