ஹாட் உடையில் வொர்க் அவுட் பண்ணும் கயடு லோஹர்!.. பாத்து பாத்து ஏங்கும் ஃபேன்ஸ்!..

Kayadu lohar: பொதுவாக கோலிவுட்டுக்கு மும்பை, பெங்களூர், கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து கதாநாயகிகள் வருவார்கள். கோலிவுட்டில் உள்ள 90 சதவீத நடிகைகளை இதில் சுருக்கிவிடலாம். சில நடிகைகள் மட்டுமே ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலிருந்து வருவார்கள். அப்படி புனேவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார் கயடு லோஹர்.

டீன் ஏஜிலேயே மாடலிங் துறையில் இவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரி படிப்புக்கு பின் மாடலிங் செய்து கொண்டிருந்த கயடு லோஹர் சில விளம்பர படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசை வரவும் அதற்கான முயற்சிகள் செய்தார்.

முதல் பட வாய்ப்பு கன்னடத்தில் கிடைத்தது. 2021ம் வருடம் வெளிவந்த முகில்பேட்டே என்கிற படம் மூலம் நடிக்க துவங்கினார். அதன்பின் மலையாளத்தில் உருவான பதோன்பதம் நோட்டண்டு என்கிற சரித்திர படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு அழுத்தமான வேடம். அதன்பின் தெலுங்கில் அல்லூரி, ஐ பிரேம் யூ போன்ற படங்களில் நடித்தார்.

இப்போது டிராகன் படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்திருக்கிறார். அம்மணி அழகாக இருப்பதால் இந்த படம் வெளியாவதற்கு முன்பே தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டார். அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வர துவங்கியது. இப்போது டிராகன் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது.

எனவே, கயடு லோஹரின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகிறது. இந்நிலையில், ஹாட்டான உடையில் ஜிம்மில் கயடு லோஹர் வொர்க் அவுட் பண்ணும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. காஜி ரசிகர்கள் இதற்கு லைக்குகளை போட்டு வருகிறார்கள்.
