இப்படியெல்லாம் இழுத்து மூடுனா வியாபாரம் ஆகாது!.. கயாடு லோஹரை கலாய்க்கும் ஃபேன்ஸ்!..

by Admin2 |   ( Updated:2025-03-18 03:49:15  )
kayadu
X

Kayadu Lohar: அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் கயாடு லோஹர், இப்போது இவரின் குடும்பம் புனேவில் வசிக்கிறது. டிராகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கண்ணியாக மாறியிருக்கிறார். பி.காம் பட்டதாரியான இவருக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.


எனவே, கல்லூரி படிப்புக்கு பின் சில அழகிப்போட்டிகளில் கலந்துகொண்டார். சில விளம்பர படங்களிலும் நடித்தார். அப்படியே சினிமாவிலும் நுழைய ஆசைப்பட்டார். அதன் விளைவாக ஒரு கன்னட படத்தில் அறிமுகமானார். இவரின் நடிப்பில் உருவான திரைப்படம் 2021ம் வருடம் வெளியானது.


அதன்பின் மலையாளம், தெலுங்கு, மராத்தி என தலா ஒரு படத்தில் நடித்தார். இப்போது டிராகன் படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்திருக்கிறார். டிராகன் படம் வெளியானபோது இவரின் புகைப்படங்கள்தான் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தன. டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எங்கு போனாலும் இவரின் புகைப்படங்களை பகிர்ந்து பலரும் ஜொள்ளு விட்டிருந்தனர்.


இதையெல்லாம் பார்த்து நெகிழ்ந்து போன கயாடு லோஹர் தமிழிலேயே பேசி நன்றி சொல்லி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி சொல்லியிருந்தார். ஒருபக்கம் டிராகன் படமும் சூப்பர் ஹிட் அடித்திருக்கிற்து. 25 கோடி செலவில் உருவான இப்படம் 150 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.


எனவே, கயாடு லோஹாருக்கு கோலிவுட்டில் மவுசு கூடியிருக்கிறது. அடுத்து அதர்வாவுடன் இவர் நடித்த இதயம் முரளி படம் வெளியாகவுள்ளது. மார்க்கெட்டை பிடிக்க இதுதான் சரியான நேரம் என கணக்குப்போட்ட கயாடு லோஹர் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், கயாடு லோஹரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாக கொஞ்சம் கிளாமர் காட்டி போட்டோக்களை வெளியிடும் கயாடு லோஹர் இழுத்து மூடியிருப்பதால் இப்படியெல்லாம் பண்ணா வியாபாரம் ஆகாது என கலாய்த்து வருகிறார்கள்.




Next Story