பூ போட்ட ஜாக்கெட்டு ஜிவ்வுன்னு ஏறுது!.. புடவையில் வெறியேத்தும் கீர்த்தி சுரேஷ்!...
Keerthi suresh: அம்மா நடிகை என்பதால் தானும் நடிகையாக வேண்டும் என சின்ன வயதிலேயே ஆசைப்பட்டவர் கீர்த்தி சுரேஷ். நான் நடிகையாகி சூர்யாவுடன் நடிப்பேன் என பள்ளியில் படிக்கும்போதே தனது தோழிகளிலும் சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கு நம்பிக்கையுடன் இருந்தவர் கீர்த்தி.
ஆசைபட்டது போலவே இது என்ன மாயம் என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அப்படியே தெலுங்கு சினிமாவுக்கும் போனார். சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
தெலுங்கில் மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வாங்கினார். இதையடுத்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள நல்ல கதைகள் அவருக்கு கிடைத்து வருகிறது. அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.
சாணி காயிதம், பென் குயின் போன்ற பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்தார். சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், அது எல்லாம் பொய். பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஒருவரை காதலித்து வருகிறேன் என சொல்லி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த காதலர் ஆண்டனியை சில நாட்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார்.
இப்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். பாலிவுட்டில் வாய்ப்பை பிடிப்பதற்காக கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், கருப்பு நிற புடவை மற்றும் கவர்ச்சி ஜாக்கெட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.