அல்ட்ரா மாடர்ன் கிளாமரில் கீர்த்தி சுரேஷ்!.. ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் புகைப்படங்கள்!...
Keerthi suresh: நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை மேனகாவின் மகள்தான் இந்த கீர்த்தி சுரேஷ். சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். கேரளாவை சேர்ந்த கீர்த்தி சில மலையாள திரைப்படங்களில் சிறுமியாக நடித்திருக்கிறார்.
கீர்த்தியின் அம்மா மேனகா தமிழ் பெண்தான். அவர் மலையாள தயாரிப்பாளர் சுரேஷை திருமணம் செய்து கொண்டார். மலையாளத்தில் 125 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார் மேனகா. திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திவிட்டார்ர். அம்மா நடிகை என்பதால் கீர்த்திக்கும் நடிக்கும் ஆசை ஏற்பட்டது.
அதேநேரம், அம்மாவை போல மலையாள படத்திற்கு போகாமல் கோலிவுட் பக்கம் வந்தார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினி முருகன் படம் கீர்த்தியை பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது.
தனுஷுடன் தொடரி, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ, விஜயுடன் பைரவா என டேக் ஆப் ஆனார். அப்படியே ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு சினிமாவிலும் நடிக்க துவங்கினார். மகாநாடி படத்தில் அசத்தலாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
நயன்தாராவை போல பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட ரகுதாத்தா என்கிற படம் வெளியானது. இப்போது சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் கீர்த்தியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துவிட்டது.