இது என்ன வெட்டிங் ஸ்பெஷலா!.. தூக்கலான கிளாமரில் கீர்த்தி சுரேஷ்!.. வைரல் போட்டோஸ்!...

by Murugan |
keerthi
X

keerthi

Keerthi suresh: இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் கீர்த்தி சுரேஷ். இவரின் அம்மா மேனகா நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர். பள்ளியில் படிக்கும்போதே நடிகையாக வேண்டும் என்கிற ஆசை கீர்த்திக்கு ஏற்பட்டது. சில மலையாள திரைப்படங்களில் சிறுமியாக நடித்திருக்கிறார்.




தமிழில் சூர்யா, விஜய், தனுஷ் போன்ற இளம் நடிகர்ளுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஒருபக்கம், தெலுங்கு சினிமாவிலும் நடித்து அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறார். மாகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.


விஜயுடன் சர்கார், பைரவா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார். தமிழை விட தெலுங்கில்தான அதிகம் நடித்து வருகிறார். தெலுங்கில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.


அதோடு, பாலிவுட் பக்கம் போய் ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். அட்லி தமிழில் இயக்கிய தெறி படத்தை ஹிந்தியில் பேபி ஜான் என்கிற பெயரில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இனிமேல் தொடர்ந்து ஹிந்தியில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஒருபக்கம், பல வருடங்களாகவே கேரளாவை சேர்ந்த ஆண்டனி தட்டில் என்பவரை பல வருடங்களாகவே காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இன்று கோவாவில் திருமணம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான், ஒரு ஆங்கில வார இதழை விளம்பரப்படுத்தும் போட்டோஷுட்டில் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




Next Story