மல்கோவா மாம்பழம் போல கும்முன்னு இருக்கு பாப்பா!.. மமிதா பைஜூவை ரசிக்கும் ஃபேன்ஸ்...
Mamitha Baiju: அழகான கதாநாயகிகள் நிறைந்திருக்கும் கேரளாவில் இருந்து சினிமாவுக்கு வந்துள்ள மற்றொரு இறக்குமதிதான் மமிதா பைஜு. இவர் கொச்சியில் பி.எஸ்.சி சைக்காலஜி படித்தவர். ஆனால், 3வது வருடத்தில் பாதியோடு படிப்பை விட்டுவிட்டார். 2017ம் வருடம் இவர் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் வரவேற்பை பெற்ற பிரேமலு படம்தான் இவரை கோலிவுட் ரசிகர்களிடமும் பிரபலப்படுத்தியது. ஆனால், அதற்கு முன்பே 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவரை எல்லாமே மலையாள திரைப்படங்கள்தான். பிரேமலு படத்திற்கு பின் ரெபள் என்கிற தமிழ் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தாலும் படம் ஏனோ ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இப்போது விஷ்ணு விஷாலுடன் ஒரு படத்திலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 69 படத்திலும் அம்மணி நடித்து வருகிறார்.
இந்த படம் இந்த வருடம் அக்டோபரில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. விஜய் படத்திற்கு பின் கண்டிப்பாக மமிதா பைஜூ ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஏற்கனவே பிரேமலு படம் மூலம் இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
சினிமாவில் நடித்தாலும் ஒரு பக்கம் மாடலிங் துறையிலும் அதிக ஆர்வம் கொண்டவர் மமிதா பைஜூ. க்யூட்டாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.