இதுவே ஒரு வாரத்துக்கு தாங்கும்!.. தூக்கலான கிளாமரில் தூக்கத்தை கெடுக்கும் கோட் பட நடிகை!..

by Murugan |
meenakshi
X

Meenakshi chaudhary: ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மீனாக்‌ஷி சேஷாத்ரி. இவரின் அப்பா இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். சண்டிகரில் பள்ளியில் படிக்கும்போதே நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கணையாக இருந்தார். பல் மருத்தும் படித்தார். ஆனால், மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.


சில போட்டிகளில் வெற்றியும் பெற்றார். அதன்பின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. ஆனால், இவர் முதலில் நடித்தது ஒரு வெப் சீரியஸில்தான். ஹிந்தியில் 2 படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த மீனாக்‌ஷி தெலுங்கு சினிமா பக்கம் போனார். சில படங்களில் நடித்துவிட்டு தமிழில் கொலை என்கிற படத்தில் நடித்தார்.


விஜய் ஆண்டனி துப்பறியும் அதிகாரியாக நடித்த திரைப்படம் இது. இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்த சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்தார். இந்த படமும் ஓடவில்லை. இடையில் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் உருவான குண்டூர் காரம் படத்திலும் நடித்திருந்தார்.


வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த கோட் படத்தில் குட்டி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், படத்தில் இவரின் கதாபாத்திரம் சாகடிக்கப்பட்டது. இப்போது சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் வெங்கடேஷுக்கு ஜோடியாக இவர் நடித்த சங்கராந்தி வஸ்துனம் படம் பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது.


முன்னணி இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பது இவரின் ஆசை. எனவே, சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதற்காக அவ்வப்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அசத்தலான கிளாமர் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது.




Next Story