வெள்ளை நிற சுடிதாரில் க்யூட்னஸ் அள்ளுதே!.. ஆண்ட்டி லுக்கு வந்துடுச்சே நயன்தாரா!...
Nayanthara: ஐயா திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நயன்தாரா. அடுத்த படமே ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்தார். அதன்பின் பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். சில வருடங்கள் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா படத்தில் பிகினி உடையில் வந்து அதிரவைத்தார்.
அதன்பின் முன்னணி நடிகையாக மாறினார். அதன்பின் சொந்த வாழ்வில் காதல் பிரச்சனைகளில் சிக்கி சினிமாவிலிருந்தே விலகுவதாக அறிவித்தார். ஆனால், காதல் தோல்வியில் முடியவே ராஜா ராணி திரைப்படம் மீண்டும் நடிக்க துவங்கினார். அந்த படத்தின் வெற்றி அவரை நம்பர் ஒன் நடிகையாக மாற்றியது.
நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இந்த காதல் அவருக்கு திருமணத்தில் முடிந்தது. சில வருடங்கள் காதலித்துவிட்டு 2 வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். அதோடு, வாடகைத் தாய் மூலம் 2 குழந்தைகளுக்கும் அம்மாவாக மாறினார்.
இப்போதெல்லாம் பெரும்பாலும் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் உருவாகியுள்ள ராக்காயி படம் தொடர்பான வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது. ஒருபக்கம், தனது புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை நிற சுடிதார் அணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு ஆண்ட்டி லுக்கு வந்துடுச்சி’ என பதிவிட்டு வருகிறார்கள்.