எல்லா ஆங்கிளிலும் அழகை காட்டும் பூஜா ஹெக்டே!.. பாக்க பாக்க என்னமோ பண்ணுதே!...

Pooja Hedge: மும்பையில் பிறந்து வளர்ந்தவர் பூஜா ஹெக்டே. பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை என எல்லாமே அவருக்கு அங்குதான். சிறு வயது முதலே நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டு பல வருடங்கள் அதை கற்றுக்கொண்டார். பரதநாட்டியம் உள்ளிட்ட பல நடனங்களும் இவருக்கு ஆட தெரியும்.
மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட பெண்ணாக இருந்த இவர் கல்லூரிக்கு சென்றதும் எல்லா போட்டிகளிலும் கலந்துகொண்டு தனது குறைகளை அவரே போக்கினார். கல்லூரியில் படிக்கும்போதுதான் இவருக்கு மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
மிஷ்கின் தான் இயக்கிய முகமூடி படத்தில் பூஜா ஹெக்டேவை அறிமுகம் செய்து வைத்தார். அந்த படம் ஓடவில்லை. எனவே, கோலிவுட்டுக்கு குட்பை சொல்லிவிட்டு ஆந்திரா பக்கம் போனார். தெலுங்கு சினிமா அவருக்கு கை கொடுத்தது. தெலுங்கில் தொடர்ந்து நடிக்க துவங்கினார்.
ஒருகட்டத்தில் அங்கு முன்னணி நடிகையாக மாறினார். பிரபாஸ், மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். தமிழில் விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து அவர் ஆடிய அரபிக்குத்து பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இப்போது பாலிவுட்டிலும் களமிறங்கியுள்ளார். சில ஹிந்தி பட வாய்ப்புகளும் அவரை தேடி வருகிறது. அவற்றை தக்க வைத்துக்கொள்வதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், பூஜாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.