கண்ணாடி உடையில் அழகை அப்படியே காட்டும் ராஷ்மிகா!... உன்ன பாத்தாலே மஜாதான்!..
Rashmika Mandana: தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. சொந்த மாநிலம் கர்நாடகா என்றாலும் நடிப்பதெல்லாம் தெலுங்கு படங்களில்தான். துவக்கத்தில் சில கன்னட படங்களில் நடித்துவிட்டு தெலுங்கு பக்கம் போய்விட்டார். அங்கு இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.
இவர் தீவிர விஜய் ரசிகை. கில்லி படம் பார்த்துவிட்டு விஜயின் ரசிகையாக மாறினார். வாரிசு படத்தில் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்த போது அந்த படத்தின் பூஜையில் விஜயிடம் அவர் நடந்துகொண்டதெல்லாம் புகைப்படமாக வெளியாகி வைரலானது தனிக்கதை. வாரிசு படத்திற்கு முன்பு கார்த்தி நடித்த சுல்தான் படத்திலும் ராஷ்மிகா நடித்திருந்தார்.
விஜய தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் அவரை கோலிவுட் ரசிகர்களிடமும் பிரபலமாக்கியது. சில படங்களில் இருவரும் இணைந்து நடித்ததால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. புஷ்பா 2 புரமோஷன் விழாவில் உங்களின் கல்யாணம் யாருடன் என கேட்டபோது ‘அது எல்லோருக்கும் தெரியும்’ என ஒப்பனாக சொன்னார் ராஷ்மிகா.
அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்த புஷ்பா சூப்பர் ஹிட் அடித்ததால் ராஷ்மிகா பேன் இண்டியா நடிகையாக மாறிவிட்டார். எனவே, ஹிந்தியில் அனிமல் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார். சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படம் 1500 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை செய்திருக்கிறது.
அவ்வப்போது கவர்ச்சியான உடைகளில் அழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களையும் ராஷ்மிகா வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், ஒரு விளம்பரத்திற்காக கண்ணாடி போல உடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.