கண்ட்ரோல் பண்ணி பாருங்க!.. தூக்கலான கிளாமரில் ரசிக்க வைக்கும் ராஷ்மிகா.. செம பிக்ஸ்!...
Rashmika mandana: கர்நாடகாவை சொந்த மாநிலமாக கொண்டவர் ராஷ்மிகா மந்தனா. நடிப்பின் மீது ஆர்வம் ஏற்படவே ஒரு கன்னட படத்தில் அறிமுகமானார். அதன்பின் சில கன்னட படங்களில் தொடர்ந்து நடித்தார். அப்போதுதான் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் விஜய தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது.
அந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததோடு ராஷ்மிகாவுக்கு ரசிகர்களும் உண்டானார்கள். இந்த படம் ராஷ்மிகாவுக்கு தமிழிலிலும் ரசிகர்களை உண்டாக்கியது. தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் அறிமுகமானார். அந்த படம் தோல்வி அடையவே மீண்டும் தமிழில் நடிக்கவில்லை. நடிகர் விஜயின் தீவிர ரசிகை இவர்.
விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தை மிகவும் பார்த்து ரசித்ததாக சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் விடுவார.. வாரிசு படத்தில் விஜயுடன் நடித்தார். இந்த படம் தமிழ், தெலுங்கில் வெளியானது. தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் இவர்.
கடந்த சில வருடங்களாக ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். அமிதாப்பச்சனுடனும் ஒரு படத்தில் நடித்தார். அனிமல் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் நிறைய முத்தக்காட்சிகளிலும் நடித்து அதிர வைத்தார். அந்த படத்தை பலரும் திட்டினாலும் நல்ல வசூலை பெற்றது.
ஒருபக்கம், அசத்தலான கவர்ச்சி உடைகளை அணிந்து ரசிகர்களையும் சந்தித்து வருகிறார். மேலும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறார். அந்தவகையில், ராஷ்மிகாவின் புதிய புகைப்படங்கள் ரசிக்க வைத்திருக்கிறது.