அரை டவுசர் போட்டு நியூ இயர் வாழ்த்து சொன்ன ராஷ்மிகா!.. செம தூக்கலா இருக்கே!...
Rashmika Mandana: கர்நாடகாவை சொந்த மாநிலமாக கொண்டிருந்தாலும் தெலுங்கில் கொடி நாட்டியவர் ராஷ்மிகா மந்தனா. ஆரம்பத்தில் சில கன்னட படங்களில் நடித்துவிட்டு பின்னர் ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு படங்களில் நடித்தார். விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து இவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படமும் மூலம் கோலிவுட்டிலும் ரசிகர்களை பெற்றார். ஒரு கட்டத்தில் நேஷனல் கிரஸ்ஸாகவும் மாறினார். தெலுங்கில் தொடர் ஹிட் படங்களை கொடுத்தார். மகேஷ்பாபு உள்ளிட்ட பல இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இவர் விஜயின் தீவிர ரசிகை இவர். கில்லி படம் பார்த்தது முதலே அவருடன் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
ஆனால், கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்ததே இவரின் முதல் தமிழ் படமாக அமைந்து. இந்த படம் தமிழ், தெலுங்கில் வெளியானது. விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து சில படங்களில் நடித்ததில் அவருடன் ராஷ்மிகாவுக்கு காதலும் ஏற்பட்டது. விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
அல்லு அர்ஜுனுடன் நடித்த புஷ்பா படம் சூப்பர் ஹிட் அடித்ததால் பேன் இண்டியா நடிகையாகவும் மாறிவிட்டார் ராஷ்மிகா. அமிதாப்பச்சனுடன் ஒரு படத்தில் நடித்தார். ரன்வீர் கபூருடன் அனிமல் படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் முத்தக்காட்சிகளில் புகுந்து விளையாடியிருந்தார்.
அல்லு அர்ஜுனுடன் மீண்டும் ராஷ்மிகா நடித்து டிசம்பர் 5ம் தேதி வெளியான புஷ்பா 2 படம் 1500 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது. எனவே, இந்திய அளவில் முக்கிய நடிகையாக ராஷ்மிகா பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அரை டவுசர், டீசர்ட் அணிந்து தரையில் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து அவரின் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியிருக்கிறார்.