மட்ட பாடலுக்கு ஷிவானி போட்ட வீடியோ!.. அந்த மஞ்சள் சேலையை விட இந்த நீல சேலை நல்லா இருக்கே!..
கோட் படம் ஓடிடியில் வெளியாகி தற்போது ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் அந்தப் படத்தின் பாடல்களை சினிமா பிரபலங்கள் ரீல்ஸ் செய்து போட்டு வருகின்றனர். பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ஷிவானி நாராயணன் தற்போது மட்டப் பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் மற்றும் த்ரிஷா வேற லெவல் குத்தாட்டம் போட்டு மட்ட பாடல் கோட் படத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாடலாக மாறியுள்ளது. அந்த பாடலுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் ரீல்ஸ் வீடியோக்களை தொடர்ந்து போட்டு வருகின்றனர்.
சினிமா வாய்ப்பு கிடைக்காமல் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பிரபலமாக மாறி உள்ள ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள மட்ட ரீல்ஸ் வீடியோவில் நீல நிறம் பட்டு சேலை அணிந்து கொண்டு செம க்யூட்டாக வைப் செய்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் பெய்த மழையில் நனைந்தபடி விஜய் மற்றும் த்ரிஷா ஆடிய ஆதி படத்தில் இடம்பெற்ற என்னை கொஞ்சம் கொஞ்சம் வா மழையே பாடலுக்கு கவர்ச்சி பொங்கல் நடனமாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் ஷிவானிக்கு சீக்கிரமே வாய்ப்பு கிடைக்குமாஎன எதிர்பார்த்த ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பிக் பாஸ் தமிழ் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ஷிவானிக்கு கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. விஜய் சேதுபதியின் டிஎஸ்பி, ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், வெற்றியுடன் பம்பர் என வரிசையாக நடித்து வந்த ஷிவானி பட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தீவிரமாக வொர்க்கவுட் செய்து தனது உடல் எடையை குறைத்துள்ளார்.
— Shivani Narayanan (@shivaninarayana) October 7, 2024