வாழ்வுதான்!.. பிரேமலு பொண்ணு பாலிஷ் ஆகிடுச்சே!.. தளபதி 69 ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு பாருங்க!

தளபதி 69 படத்தில் இணைந்துள்ள நடிகை மமிதா பைஜு புதிதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

பிரேமலு படத்தின் மூலம் இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை ருசித்த நடிகை மமிதா பைஜு. பிரேமலு படத்தை தொடர்ந்து தமிழில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக ரெபல் படத்தில் நடித்திருந்தார். ஆனால், பிரேமலு படம் தந்த வெற்றியை அந்த படம் அவருக்கு கொடுக்கவில்லை.


தமிழில் சரியான அறிமுகத்துக்கு காத்துக்கொண்டிருந்த மமிதா பைஜுவுக்கு தளபதி 69-வது படமே கிடைத்தது பெரும் பாக்கியமாக அமைந்துவிட்டது. நடிகர் விஜய் படத்தில் இனிமேல் நடிக்கவே முடியாது. அவரை சினிமாவை விட்டுப் போகிறார் என கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மமிதா பைஜு பேசியிருந்தார். ஆனால், தற்போது விஜய்யின் கடைசி படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது.


மலையாளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சர்வோபரி பாலக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மமிதா பைஜு. ஹனி பி 2, கிருஷ்ணம், வரதன், ஸ்கூல் டைரி, கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ், ஆப்பரேஷன் ஜாவா, சூப்பர் சரண்யா உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.


சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஐஃபா விருது விழாவில் பிரானய விலாசம் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதினை மமிதா பைஜு பெற்றது குறிப்பிடத்தக்கது. விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததுமே மமிதா பைஜு ஆளே மாறிட்டாரே என ரசிகர்கள் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து வலிந்து வருகின்றனர்.





Related Articles
Next Story
Share it