பேன் இண்டியா படமா அப்படின்னா என்னங்க? தமிழ்ல வந்த முதல் பேன் இண்டியா படம் இதுதான்...!
அதென்ன பேன் இண்டியா. எங்க பார்த்தாலும் தற்போதைக்கு ட்ரெண்டான பேச்சு இதுதான்.
பொதுவாகவே பேன் இண்டியா பிலிம்ஸ்னு லேபிள் இருக்கணும்னா அந்தப்படத்தோட பட்ஜெட் கிட்டத்தட்ட 100 கோடில இருந்து 500 கோடி ரூபாய் வரை இருக்க வேண்டும். 2வது என்னன்னா இந்தப்படத்தில் நடிக்கக்கூடிய நடிகர்கள் மற்ற மொழிகளில் இருந்து வரும் டாப் முன்னணி நடிகர்களாக கண்டிப்பாக இருக்க வேண்டும்.
3வது இந்தப்படத்தின் பிரச்சனையானது இந்திய அளவில் உள்ள பிரச்சனையோ அல்லது இந்திய அளவில் பிரதிபலிக்கக்கூடியதாகக் கொண்ட கதை அம்சமாக இருக்க வேண்டும். இந்தப்படத்தைப் பிரமோட் பண்ற விதம் ஆல் இந்தியா லெவல்ல இருக்கணும்.
நம்ம தமிழ்ல முதன் முதலா பேன் இண்டியா படம்னு அங்கீகாரம் பெற்ற படம் ஷங்கர் இயக்கிய எந்திரன். இந்தப்படம் எப்படிங்க நார்த் இண்டியா லெவல்ல பாப்புலரானதுன்னா இந்தப்படத்தை முதல்ல கமல்ஹாசன்கிட்ட தான் டைரக்டர் ஷங்கர் சொன்னாரு.
அந்தப் படத்துக்கான புரொடியூசரையும் அவரு மும்பைல தான் தேடினார். அவருக்கிட்ட இருந்து வரும் தகவல் தாமதமானதால தான் கமல் இந்தப்படத்தில இருந்து விலகினார். இது 1997-98ல தான் நடந்தது. அப்புறம் இந்தப்படத்தில பாலிவுட்ல ஷாருக்கான்கிட்டயும் சொன்னாரு.
அவரு ஒரு சில காரணங்களால விலகினாரு. பாலிவுட் ஹீரோ ஒத்துக்காத கதைல நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒத்துக்கிட்டு இந்தப்படத்தில நடிச்சதால ஒரு எதிர்பார்ப்பு இந்திய அளவில இருந்து வந்தது. அதுமட்டுமில்லாம பாலிவுட் ஸ்டார் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய் இந்தப்படத்தோட ஹீரோயினா நடிச்சதால இந்தப்படத்துக்கு இந்திய முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்தப்படத்துக்கு வேற லெவல் வரவேற்பு கிடைச்சது. அந்த எதிர்பார்ப்பை இந்தப்படம் 100 சதவீதம் பூர்த்தி செய்தது. தவிர இந்தப்படத்தோட பட்ஜெட் 2010லயே ரூ.100 கோடி. இந்தப்படத்தில வில்லன் ஹாலிவுட் நடிகர் டேனி டென்ஷோபா. சயின்டிபிக்ஸ் மூவியாகவும் அமைந்தது. தொடர்ந்து 2.0 படத்தை ஷங்கர் 100 சதவீதம் பேன் இண்டியா படமா கொண்டு வந்தாரு. இதுவும் 500 கோடி பட்ஜெட்.
அதே போல பாகுபலி படமும் பேன் இண்டியா படம் தான். இந்தப்படம் 500 கோடில எடுத்தாங்க. இது 2.0க்கு முன்னாடியே வந்தது. இதுல தமிழ் முன்னணி நடிகர்கள் நடிச்சிருந்தாங்க. நார்த் இண்டியால இருந்து பாகுபலியோட கன்குளுசன் பாகுபலி 2 க்கு பெரும் எதிர்பார்ப்பு வந்ததால பாகுபலி 2 வெளியானது.
சமீபத்தில வெளியான கேஜிஎப் படத்தை பேன் இண்டியா படமாக எடுக்கல. இது வந்து ஒரு மாஸான படம். கர்நாடகால பெரிய லெவல்ல ஒரு ஆக்ஷன் படமா எடுக்கணும்னு தான் எடுத்தாங்க. இதை எடுத்து இந்தில டப் பண்ணும்போது இது வரவேற்பு பெறுமான்னு பலரும் சந்தேகப்பட்டாங்க. இருந்தாலும் டைரக்டர் பிராஷிந்தினி தான் இதை டப் பண்ணி வெளியிட்டார்.
இந்தப்படத்தோட திரைக்கதை, அம்சங்கள் பார்த்து நார்த் இண்டியால இருந்து பெரும் எதிர்பார்ப்பு வந்ததால கேஜிஎப் 2ல நடிக்க இந்தி நடிகர் சஞ்சய் தத் ஒத்துக்கிட்டதால இதுக்கு பெரும் எதிர்பார்ப்பு வந்தது. அதனால இந்தப்படமும் பேன் இண்டியா படமானது. கமல் தற்போது விக்ரம் படத்தை பேன் இண்டியா படமாக பிரமோஷன் பண்ணிக்கிட்டு இருக்காரு.