பொதுவாக நடிகர்கள் தான் உண்டு நடிப்பது உண்டு என இருப்பார்கள்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் வெகு சிலரே மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். அதாவது கஷ்டப்படுபவர்களுக்கு யாருக்கும் தெரியாமல் உதவி செய்வார்கள்.. குறிப்பாக மருத்துவ செலவு, கல்வி செலவு போன்றவற்றை செய்வார்கள்.. ஆனால் அது வெளியே தெரியாது.
நடிகர் அஜித் கூட பல வருடங்களாக பலருக்கும் உதவி வருகிறார். பலரின் அறுவை சிகிச்சைகளுக்கு அஜித் உதவியிருக்கிறார். அந்த நபருக்கு தேவையான பணம் அஜித்தின் சார்பில் மருத்துவமனையில் கட்டப்படும்.. ஆனால் இதெல்லாம் வெளியவே தெரியாது. வெளியே சொல்லக்கூடாது என்றும் அவர் சொல்லிவிடுகிறார்.. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் பலருக்கும் உதவி வருகிறார்.. ஆனால் அது வெளியே தெரிவதில்லை.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கதை, திரைக்கதை தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருபவரும் சசிக்குமாரை வைத்து நந்தன் என்கிற திரைப்படத்தை இயக்கியவருமான இரா.சரவணன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘சில பேர் உதவி கேட்டு வருவாங்க.. அதில் நியாயமான உதவிகளை நான் சிவகார்த்திகேயன்கிட்ட சொல்லுவேன்.. சமீபத்துல ஒரு MTech First Class-ல Pass பண்ண ஒரு பொண்ணு அவங்க அப்பா கடன் தொல்லையால் இறந்துட்டார்..
அதனால அவங்களுடைய காலேஜ் ஃபீஸ் கட்ட ரொம்ப சிரமமாக இருக்குன்னு சொன்னாங்க.. நான் சிவகார்த்திகேயனுக்கு ஒரு மெசேஜ்தான் அனுப்பினேன்.. அடுத்த நாள் அவருடைய பராசக்தி படம் ரிலீஸ் ஆகப்போகுது.. அந்த சமயத்தில் கூட அந்த பொண்ணுக்கு அவர் உதவினார்.. சின்ன உதவிதான்.. நான் செஞ்சதை வெளியே சொல்லாதீங்கன்னு சொன்னார்..
அதே மாதிரி குடிசை வீட்டில் வசிக்கும் ஒரு மாணவியை நீட் படிக்க வச்சது அவர்தான்.. பெரிய உதவி பண்ணினார்.. அந்த பொண்ணு இப்ப மெடிசன் படிச்சுக்கிட்டு இருக்காங்க.. அதே மாதிரி இன்னொரு பையனோட படிப்பு செலவு இன்னைக்கு வரைக்கும் சிவாதான் பண்ணிட்டு இருக்கார்’ என சொல்லியிருக்கிறார்..












