உள்ளம் உருகுதைய்யா!... முருகனாக சூர்யா.... வைரல் புகைப்படம்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா. பிரியங்கா அருள் மோகன், வினய் ராய், சூரி, சத்தியராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் அதாவது முதல் பாடல் வீடியோ ‘வாடா தம்பி’ என துவங்கும்பாடல் சமீபத்தில் வெளியானது. இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத் என இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியிருந்தனர்.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘உள்ளம் உருகுதைய்யா’ பாடலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டது. இந்த பாடல் சூர்யா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலில் சூர்யா முருகன் வேடத்தில் இருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.